சர்வதேச கிரிக்கெட் பேரவையின் முன்னாள் போட்டி தீர்ப்பாளரும் இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ரோஷன் மகாநாமா ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
அரவிந்த டி சில்வா மற்றும் முத்தையா முரளிதரன் , ரஞ்சித் பெர்னாண்டோ ,மஹேல ஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்காரா ஆகியோர் கிரிக்கெட் கமிட்டியின் அங்கத்தவர்கள் என்று அறிய முடிகின்றது.
தேசிய விளையாட்டுக் குழுவில் (Sports Counsil) மஹேல ஜெயவர்தன மற்றும் குமார் சங்கக்காரா உறுப்பினர்களாக இருப்பதால் அவர்கள் கிரிக்கெட் கமிட்டியின் தலைமை பொறுப்பு ஏற்க வாய்ப்பில்லை.
விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்ஷ கடந்த வாரம் இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அதிகாரிகளை சந்தித்து மார்ச் 1 ஆம் தேதிக்குள் செயல்படுத்தப்படவுள்ள கிரிக்கெட் கமிட்டியை நியமிப்பது உட்பட ஏழு பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையிலேயே அமைக்கப்படவுள்ள கிரிக்கெட் கமிட்டியின் தலைவராக மஹாநாம நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.