இந்த ஆண்டில் அதிக பிடிகளை தவறவிட்ட டெஸ்ட் அணிகள்- முதலிடம் எந்த அணிக்கு தெரியுமா ?

இந்த ஆண்டில் அதிக பிடிகளை தவறவிட்ட டெஸ்ட் அணிகள்- முதலிடம் எந்த அணிக்கு தெரியுமா ?

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.

மூன்று போட்டிகள் நிறைவுற்ற  நிலையில், 4வது போட்டி ஓவல் மைதானத்தில் பரபரப்பான நிலையில் இடம்பெற்று வருகிறது.

கிரிக்கெட்டில்  ‘Catches win matches ‘ என்று சொல்வார்கள்,பிடிகளை பிடித்தால் போட்டிகள் வெற்றி கொள்ளப்படும், தவறினால் போட்டிகளும் தவறிப் போகும் என்பதுதான் அதன் அர்த்தம்.

ஆனால் டெஸ்ட் போட்டிகளில் Catches என்பதே மிகப்பெரிய சாதகத்தையும் வெற்றிக்கான வாய்ப்புகளையும் வழிவகுத்து கொடுப்பவை, அப்படியான பிடியெடுப்புகளை தவறவிடும் அணிகள் வரிசையில் இந்த ஆண்டில் முதல் இடத்தில் இருக்கிறது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4-வது டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு நாட்கள் நிறைவுக்கு வந்த நிலையில் கிடைத்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மொத்தம் 33 பிடிகளை தவறவிட்டுள்ளது.

 இதற்கு அடுத்த இடத்தில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது, இந்த ஆண்டு மட்டும் மொத்தம் 20 பிடிகளை தவறவிட்டு இரண்டாவது இடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.