கால்பந்து உலகில் புதிய உலக சாதனையை நிலைநாட்டியது இத்தாலி கால்பந்து அணி..!
கால்பந்து உலகில் புதிய உலக சாதனை ஒன்றை இத்தாலி தேசிய கால்பந்தாட்ட அணி நிலைநாட்டியது .
கட்டாரில் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக தகுதிகாண் போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன .
இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற சுவிஸ்லாந்து அணியுடனான தகுதிகாண் போட்டியில் இத்தாலி அணி 0-0 என போட்டியை முடித்ததன் மூலமாக கால்பந்து உலகில் புதிய உலக சாதனை உடன் கூடி 36 ஆவது போட்டியில் தோல்வியை தவிர்த்துள்ளது.
இதற்கு முன்னர் ஒரு தேசிய கால்பந்தாட்ட அணி தொடர்ச்சியாக தோல்வியை எதனையும் தழுவாத சந்தர்ப்பமாக 35 போட்டிகள் காணப்பட்டன.
பிரேசில் மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகள் இருவேறு சந்தர்ப்பங்களில் இந்த சாதனையை நிலைநாட்டின.
இத்தாலியை தேசிய கால்பந்தாட்ட அணி நேற்றறு 36 ஆவது போட்டியில் தோல்வியைத் தவிர்த்து புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
கடந்த முறை இடம்பெற்ற கால்பந்து உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு தகுதி பெறாத இத்தாலி, அதன் பின்னர் வந்த அத்தனை ஆட்டங்களிலும் அதிகளவான மாற்றங்களோடு அசுர வளர்ச்சி பெற்று அசத்தி கொண்டிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது .
அண்மையில் நிறைவுக்கு வந்த யூரோ கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் மகுடம் சூடிக் கொண்டதுடன் இப்போது 36 ஆட்டங்களாக தோல்விகள் எதனையும் சந்திக்காது பயணிக்கின்றமை முக்கியமானது.