தோல்விப் பயத்திலேயே மிஷ்பா, வக்கார் பதவி விலகினர்- ஷோயிப் அக்தார் சர்சையான கருத்து..!
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் ஷோயிப் அக்தரின் கருத்துப்படி, முன்னாள் தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகியோரின் ராஜினாமா பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நன்மையானது என தெரிவித்தார்.
அக்தர், மிஸ்பா-வக்கார் ஜோடியின் கடுமையான விமர்சகராக இருந்தார் ,மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைமை மாற்றத்தால் இந்த ராஜினாமாக்கள் ஏற்பட்டதாக அவர் கருதுகிறார்.
PCB யில் உள்ள உயர் அதிகாரிகள் டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாக நிர்வாகத்தில் மிஸ்பா மற்றும் வக்கார் இருப்பதற்கு ஆதரவாக இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் ராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டதாகவும், அவர்கள் விருப்பத்துடன் பதவி விலகவில்லை என்றும் நான் உணர்கிறேன்.
அவர்கள் பதவியில் தொடர்ந்திருந்தால், நான் அதை ஒரு கோழைத்தனமான முடிவு என்று கூறுவேன், ”என்று அக்தர் தனது யூடியூப் வீடியோவில் கூறினார்.
முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா தலைவராக பொறுப்பேற்ற பிறகு வேலையை இழக்க நேரிடும் PCB தலைமை நிறைவேற்று அதிகாரி (CEO) வாசிம் கானுக்கு சோயிப் எச்சரிக்கை மணி அடித்தார்.
“வாசிம் கான் தனது வேலையைத் தொடர முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஏனென்றால் ஒரு புதிய தலைவர் வரும்போதெல்லாம், அவர் எப்போதும் தனது சொந்த அணியைக் கொண்டு வருவார். ரமீஸ் ராஜா யாரை வேண்டுமானாலும் பணியமர்த்தவும், பணிநீக்கம் செய்யவும் முழு உரிமை உண்டு. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் சாதகமான மற்றும் மேம்பாட்டுக்கான ஒவ்வொரு முடிவையும் நாங்கள் ஆதரிப்போம்.
மிஸ்பா-வக்கார் 2 வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த பிறகு மெகா நிகழ்வுக்கு சற்று முன்பு ராஜினாமா செய்வதில் எந்த தர்க்கமும் இல்லை என்றும் அக்தர் வலியுறுத்தினார்.
T20 அணி அறிவிக்கப்பட்ட பிறகு திடீரென ராஜினாமா செய்யப்பட்டது. நீங்கள் கிட்டத்தட்ட 24-25 மாதங்கள் பதவியில் இருந்தீர்கள், நீங்கள் விருப்பத்துடன் ராஜினாமா செய்திருந்தால், நான் அதை ஒரு கோழைத்தனமான செயல் என்று கூறுவேன்.
டி 20 உலகக் கோப்பையில் நீங்கள் தோல்வி அடைவீர்கள் என்று பயந்தீர்கள் என்று அர்த்தம் எனவும் அக்தார் கருத்து தெரிவித்தார்.