இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான சென்னையில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது .
இந்த போட்டியில் ஜஸ்பிரிட் பூம்ரா 17 டெஸ்ட் போட்டிகளுக்கு பின்னர் சொந்த மண்ணில் இந்தியாவில் முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார்.
இவர் இன்று வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலே பிடி எடுப்பதற்கான வாய்ப்பை விக்கட் காப்பாளர் பான்ட் நழுவவிட்டார், கொஞ்சம் கடினமான வாய்ப்பாக இருந்தாலும் இந்த பிடியெடுப்பை பான்ட் நழுவவிட்டமை குறிப்பிடத்தக்கது.