இந்திய அணிக்கு அழைக்கப்பட்ட தோனி- கொண்டாட்டத்தில் ரசிகர்கள் .!

மீண்டுமொரு உலகக் கிண்ணத்தை குறிவைத்து இந்திய அணிக்கு அழைக்கப்பட்ட தோனி- கொண்டாட்டத்தில் ரசிகர்கள் .!

இந்திய கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண T20 போட்டிகளுக்கான அணி விபரத்தை இந்திய கிரிக்கட் சபை இன்று அறிவித்தது.

அதிர்ச்சியும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்த அணி பலமான வலுவான அணியாகவே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

அணியில் சஹால், குல்தீப் யாதவ், தவான் ஆகியோர் சேர்க்கப்படவில்லை ஆயினும்  அணித்தேர்வில் மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடக்கூடிய ஒரு விஷயத்தை இந்திய கிரிக்கெட் சபை மேற்கொண்டுள்ளது.

2007 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் உலகு உலகக் கிண்ணங்களை இந்தியாவிற்கு பெற்றுக்கொடுத்த மஹேந்திர சிங் தோனி மீண்டும் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இம்முறை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான தோனி இந்திய கிரிக்கெட் அணியின் ஆலோசகராக + வழிநடத்துனராக (Mentor) இருப்பார் என இந்திய கிரிக்கெட் சபை அறிவித்திருக்கிறது.

ஆக மொத்தத்தில் 2007 T20 உலகக் கிண்ணம், 2011 உலக கிண்ணம் ஆகியவற்றை தொடர்ந்து இம்முறை இந்தியா உலகக் கிண்ணத்தை கைப்பற்றுமானால் அங்கேயும் தோனியின் பெயர் பொறிக்கப் படும் என்பதில் ஆச்சரியமில்லை.

தோனி அண்ட் கோஹ்லி கூட்டணிக்கு வாழ்த்துக்கள்.