நடராஜனை ஏன் உலகக்கிண்ண அணியில் சேர்க்கவில்லை- தலைமை தேர்வாளர் தகுந்த விளக்கம்..!

நடராஜனை ஏன் உலகக்கிண்ண அணியில் சேர்க்கவில்லை- தலைமை தேர்வாளர் தகுந்த விளக்கம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணி விபரத்தை இந்திய கிரிக்கட் சபை அறிவித்திருக்கிறது.

இதனடிப்படையில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் அணியில் இடம் பிடிப்பார் என அதிகமானவர்கள் எதிர்பார்த்தாலும், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை .

ஏன் அவரை அணியில் சேர்க்கப்படில்லை என அணியின் தலைமை தேர்வாளர் சேத்தன் சர்மா விளக்கம் கொடுத்திருக்கிறார்.

“நடராஜன் அணித்தேர்வில் விவாதிக்கப்பட்டார், ஆனால் அவர் நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடவில்லை, அவர் காயம் பட்டியலில் இருக்கிறார், அதனால்தான் நாங்கள் எங்கள் ஸ்ட்ரைக் பந்துவீச்சாளர்களான முக்கிய நபர்களுடன் தேர்வுக்கு தள்ளப்பட்டோம்.

ஒவ்வொரு முறையும் தேர்வாளர்களின் மனதில் ஒரு மாறுபாடு இருக்க வேண்டும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விக்கெட்டுகள் மெதுவாக இருக்கும், எனவே தேர்வாளர்கள் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை ஹர்திக் பாண்டியா நான்காவதாக தேர்வு செய்தனர்,  நாங்கள் இடது கை சீமரை வைத்திருக்க விரும்பினாலும், நடராஜனை உபாதையால் அணியில் சரிசெய்ய முடியவில்லை, ”என்று சேத்தன் சர்மா கூறினார்.

 

அறிவிக்கப்பட்ட இந்திய அணி – விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (VC), கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (WK), இஷான் கிஷன் (WK), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சஹார், ரவிச்சந்திரன் அஷ்வின், அக்ஸர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி.

அணியில் காத்திருப்பு வீரர்கள் -(Reserve players ) ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Previous articleஇந்திய அணிக்கு அழைக்கப்பட்ட தோனி- கொண்டாட்டத்தில் ரசிகர்கள் .!
Next articleஉலகக் கிண்ணத்துக்கான ஓமான் அணி விவரம் அறிவிப்பு..!