இலங்கையின் இளையோர் ,மற்றும் மகளிர் அணிகளுக்கான முற்று முழுதான பயிற்சி ஊழியர்களின் விபரம்..!
இலங்கையின் மகளிர் அணியினர், இலங்கை இளையோர் அணியினருக்கு பயிற்சி வழங்கும் உறுப்பினர்களுடைய விபரத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இதன்படி இலங்கை மகளிர் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் டெஸ்ட் அணித் தலைவர் ஹசான் திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார், அதோடு இலங்கை இளையோர் அணியின் தலைமை பயிற்சியாளராக அவிஷ்க ஷகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார் .
இந்த நியமனங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தாலும் கூட, இவர்களோடு சேர்ந்து பணியாற்ற கூடிய பயிற்சி ஊழியர்களின் விபரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி
மகளிர் தலைமை பயிற்சியாளர் – ஹஷன் திலகரத்ன, ரவீந்திர புஷ்பகுமார (வேகப்பந்து வீச்சு), லங்கா டி சில்வா (பீல்டிங்), மற்றும் தினுக் ஹெட்டியாராச்சி (ஸ்பின் பவுலிங்).
இலங்கை U-19 கிரிக்கெட் அணி
யு 19 தலைமை பயிற்சியாளர் அவிஷ்க குணவர்தன, உபுல் சந்தன (பீல்டிங்), சாமில கமகே (வேகப்பந்து வீச்சு), சசித் பத்திரன (ஸ்பின் பவுலிங்) மற்றும் தம்மிக சுதர்ஷன (பேட்டிங்)