எந்தவொரு போட்டியிலும் விளையாடாமல் நேரடியாக இலங்கையின் உலகக்கிண்ண அணியில் இடம் பிடித்த அதிர்ஷ்டக்கார வீரர் ..!
இலங்கையின் உலகக் கிண்ண இருபதுக்கு-20 போட்டிகளுக்கான அணி விவரம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் .
நாளை 10 திகதிக்கு முன்னர் அனைத்து அணிகளும் தங்களுடைய விபரத்தை அறிவிக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு அணிகளாக தங்களுடைய விபரத்தை வெளியிட்டு வருகின்ற நிலையில், இலங்கையின் எதிர்பார்க்கப்படுகின்ற உத்தேச அணி விவரம் கிடைக்கப்பெற்றுள்ளது .
இதிலே 21 வயதான மஹீஷ் தீக்சன எனும் சுழற்பந்து நட்சத்திரம் இலங்கை அணியில் இடம் பிடித்திருக்கிறார், இவர் இறுதியாக இடம்பெற்ற தென்னாபிரிக்காவுடனான இறுதி ஒருநாள் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
எதுவிதமான டி20 போட்டிகளில் விளையாடாமல் , நேரடியாக உலக டுவென்டி டுவென்டி அணிக்கு தேர்வு செய்யப்படும் அதிர்ஷ்டக்கார்ராக தீக்சன காணப்படுகின்றார்.
13 வீரர்கள் இறுதிப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், ஆயினும் இரண்டு இடங்களுக்குரிய 2 வீரர்கள் இடம்தான் போட்டிக்குரியதாக இருக்கிறது.
அதற்காகவே இப்போது இலங்கை அணி அறிவிப்பு தாமதமாவதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
எதிர்பார்க்கப்படும் இலங்கை அணி விபரம் வருமாறு ???
தசுன் ஷானக (தலைவர்)
தனஞ்சய டி சில்வா (VC)
அவிஷ்க பெர்னாண்டோ
குசல் பெரேரா (WK)
தினேஷ் சந்திமால் (WK)
பானுக ராஜபக்ஷ
சரித் அசலங்க
கமிந்து மெண்டிஸ்
வனிந்து ஹசரங்க
சாமிக கருணாரத்ன
துஷ்மந்த சமீர
மகீஷ் தீக்ஷனா , பினுர பெர்னாண்டோ
?அகில தனஞ்சய/லஹிரு மதுஷங்க
?பிரவீன் ஜெயவிக்ரம/நுவான் பிரதீப்
காத்திருப்பு வீரர்கள்
லஹிரு குமார
லஹிரு மதுஷங்க/அகில தனஞ்சய
ரமேஷ் மெண்டிஸ்
நுவான் பிரதீப்/பிரவீன் ஜெயவிக்ரம