இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தலைவர் கோலி பதவி விலகல்- இந்திய கிரிக்கெட் சபைக்கு கடிதம் ..!

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் தலைவர் கோலி பதவி விலகல்- இந்திய கிரிக்கெட் சபைக்கு கடிதம் ..!

இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வகையான போட்டிகளுக்கான தலைவராக இருந்த விராட் கோலி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐசிசி டுவென்டி20 உலக கிண்ண போட்டிகளின் பின்னர் டுவென்டி20 போட்டிகளுக்கான தலைமைத்துவத்தில் இருந்து விலகவுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபைக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளார் .

ஆயினும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் தலைமைத்துவத்தில் கொலி தொடர்ந்து தொடரவுள்ளதாகவும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

எம்.எஸ் தோனியிடம் இருந்து 2017 ஆம் ஆண்டில் இந்தியாவின் வெள்ளை பந்து கேப்டன்சியை கோலி பொறுப்பேற்றார். அவர் 45 டி20 போட்டிகளில் இந்தியை வழிநடத்தி, 27 ல் வெற்றியையும், 14 தோல்வியையும் பதிவு செய்தார்.

“டி 20 கேப்டனாக இருந்த காலத்தில் நான் அணிக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளேன், டி 20 அணிக்காக தொடர்ந்து பேட்ஸ்மேனாக முன்னேறுவேன்” என்று கோஹ்லி கடித்ததில் எழுதினார்.

“நிச்சயமாக, இந்த முடிவுக்கு வருவதற்கு நிறைய நேரம் பிடித்தது. எனது நெருங்கிய உறவுகளான ரவி சாஸ்திரி மற்றும் ரோஹித் ஆகியோருடன்  கலந்துரையாடல்களுக்குப் பிறகு, அக்டோபர் மாதம் துபாயில் நடக்கும் டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலக முடிவு செய்தேன் என கோலி தனது பதிவில் கூறினார்.

நான் செயலாளர் திரு ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் திரு சவ்ரவ் கங்குலி மற்றும் அனைத்து தேர்வாளர்களிடமும் இது பற்றி பேசினேன். என்னால் முடிந்தவரை இந்திய கிரிக்கெட் மற்றும் இந்திய அணிக்கு தொடர்ந்து சேவை செய்வேன், ”என்று கோலி மேலும் கூறினார்.