#AFGvSL டெஸ்ட்டில் முன்னிலை பெற்றது இலங்கை அணி..!

சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு SSC மைதானத்தில் இன்று (2) ஆரம்பமானது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று இலங்கை அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ரஹ்மத் ஷா இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்தார். அவர் 13 பவுண்டரிகளுடன் 91 எடுத்தார். நூர் அலி சத்ரன் 31 , இக்ரம் அலிகில் மற்றும் கைஸ் அஹமட் ஆகியோர் தலா 21 பெற்றனர்.

பந்துவீச்சில் விஷ்வ பெர்னாண்டோ 51 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், அசித்த பெர்னாண்டோ 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். பிரபாத் ஜெயசூர்யா 67 கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆப்கானிஸ்தான் அணியின் கடைசி ஐந்து விக்கெட்டுகளையும் 29 ஓட்டங்களுக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் வீழ்த்தியமையும் குறிப்பிடத்தக்கது.