Asia cup 2024 – மாபெரும் இறுதிப் போட்டி இன்று..!

9வது மகளிர் ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று (28)ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் போட்டி நடைபெறவுள்ளது.

போட்டித் தொடரை நடத்தும் இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே இந்த போட்டி இடம்பெறவுள்ளது.

இவ்வருடப் போட்டித் தொடரில், A பிரிவில் இருந்து போட்டிக்குள் நுழைந்த இந்திய அணி, இறுதிப் போட்டியில் இடம்பிடித்துள்ள நிலையில், போட்டியை நடத்தும் இலங்கை வீராங்கனைகளும் தோல்வியற்ற பயணத்துடன் இந்த ஆண்டுக்கான இறுதிப் போட்டிக்கான இடத்தைப் பதிவு செய்தனர்.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவது இது 9வது முறையாகும், மேலும் இந்திய வீராங்கனைகள் 7 முறை ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளனர்.

இலங்கை மகளிர் அணி 6 தடவைகள் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளதுடன், 5 தடவைகள் இரண்டாமிடமாக போட்டியை நிறைவு செய்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Previous articleஇங்கிலாந்து டெஸ்ட் – முன்னதாகவே புறப்படும் இலங்கை வீரர்கள் விபரம்…!
Next articleமகளிர் ஆசியக் கிண்ணம் வென்றது இலங்கை..!