#AUSvWI -41 வயதில் ஆட்டநாயகன் – புதிய உலக சதானை , தொடரை வென்றது மேற்கிந்திய தீவுகள்..!

அசுரத் தாண்டவமாடிய கெயில், மேற்கிந்திய தீவுகள் அணி இலகுவாய் தொடரை வென்றது ..!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று நிறைவுக்கு வந்தது.

முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றிருக்கும் மேற்கிந்திய தீவுகள், இன்றைய போட்டியிலும் இலகுவான வெற்றியை ஈட்டி தொடரை 3-0 என்று கைப்பற்றியுள்ளது.

தென்னாபிரிக்காவுடனான தொடரை சொந்த மண்ணில் 2-3 என இழந்த மேற்கிந்திய தீவுகளுக்கு, இந்த தொடர் வெற்றி என்பதே மிகப்பெரிய மனோபலத்தை கொடுத்திருக்கும் என்று நம்பப்படுகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 141 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது .

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 14.5 ஓவர்கள் நிறைவில் 142 ஓட்டங்களை பெற்று போட்டியில் இலகுவான வெற்றியை தனதாக்கியது.

அண்மைக் காலமாக T20 போட்டிகளில் மிகப்பெருமளவில் சோபிக்க தவறிய கிறிஸ் கெயில், இன்று அதிரடியாக துடுப்பெடுத்தாடி 67 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார், இதிலே 7 சிக்சர்கள் உள்ளடக்கம் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இது மாத்திரமல்லாமல் டி20 போட்டிகளில் முதல் வீரராக 14,000 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட சாதனையையும் கிறிஸ் கெயில் இன்றைய போட்டியில் நிலைநாட்டினார்.

Match Highlights ????