#AUSvWI _மிட்செல் ஸ்டார்க்கின் அபார பந்துவீச்சு- வென்றது அவுஸ்திரேலியா..!
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்டதான டுவென்டி டுவென்டி தொடரின் 4வது போட்டி சற்றுமுன் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான பந்து வீச்சு காரணமாக மிகச் சிறப்பாக 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றிருக்கிறது.
5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கும் மேற்கிந்திய தீவுகள், இன்று 4-வது போட்டியில் தோல்வியைத் தழுவிக் கொண்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை குவித்தது.
ஆஸ்திரேலியா சார்பில் இந்த தொடரின் மூன்றாவது அரைசதத்தை மிகச் சிறப்பாக மிட்செல் மார்ஷ் பெற்று கொடுத்தமையும் கவனிக்கத்தக்கது.
10 ஆண்டுகளாக அரைச்சதம் எதனையும் பெற்றுக்கொள்ளாத மாரஷ் இந்த தொடரின் 4 போட்டிகளில் பெற்றுக்கொண்ட மூன்றாவது அரை சதமாக இந்த அரைச்சதம் பார்க்கப்பட்டது.
190 எனும் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகளுக்கு இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவையாக இருந்தது.
அன்ற ரசல் களத்தில் இருக்க ஸ்டார்க் வீசிய முதல் 5 பந்துகளிலும் ஓட்டம் எதனையும் விட்டுக்கொடுக்கவில்லை ,இறுதிப் பந்தில் மட்டும் சிக்சர் அடித்தார்.
பரபரப்பான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.