Barcelona இல் இருந்து விடுபட்டார் மெஸ்ஸி
Barcelona அணியின் நட்சத்திர வீரர் Lionel Messi Barcelona அணியுடன் வைத்திருந்த ஒப்பந்தம் நேற்று நள்ளிரவுடன் முடிவுக்கு வந்துள்ளது. அந்த வகையில் தற்சமயம் மெஸ்ஸி எந்த ஒரு கழக அணியுடனும் ஒப்பந்த அடிபடையில் இணைந்திருக்கவில்லை.
கடந்த பருவகாலத்தில் Messi கும் Barcelona நிர்வாகத்திற்கும் பல முறுகல்கள் இருந்தாலும் தற்சமயம் அது சுமூகமான நிலையிலேயே காணப்படுகிறது. அத்துடன் மெஸ்ஸி 2023 வரை Barcelona அணியுடன் நீடிப்பார் என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இக் கணம் வரை ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை.
Messi ஐ தமது அணிக்கு அழைப்பதற்கு பல அணிகளும் முயற்சித்து வந்த வேளையில் 2000 ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக Messi Free agent ஆக உள்ளார்.
Manchester City, PSG, Chelsea, Juventus அணிகள் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய முனைப்பில் உள்ளன. மெஸ்ஸி Barcelona இல் நீடிப்பாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.