Bruno-Pogba ருத்ர தாண்டவம்: புதிய பருவகால போட்டிகளுக்கு அமோக ஆரம்பம்

Bruno-Pogba ருத்ர தாண்டவம்: புதிய பருவகால போட்டிகளுக்கு அமோக ஆரம்பம்

Premier League கால்பந்து புதிய பருவகால போட்டிகள் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. நேற்றைய தினம் Arsenal மற்றும் Brentford அணிகளுக்கிடையிலான போட்டியுடன் முதல் வார போட்டிகள் ஆரம்பித்தது.

முதல் போட்டியிலேயே புதிதாக Premier League தொடருக்குள் நுழைந்த Brentford அணி Arsenal அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்திருந்தது.

இன்றைய தினம் முதல் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் லீட்ஸ் யுனைடெட் அணிகள் மோதின. அரங்கம் நிறைந்த Old Trafford அரங்கில் இடம்பெற்ற போட்டியில் Bruno-Pogba நடுகள இணைப்பாட்டம் அரங்கத்தை அனல் பறக்க செய்ததது. Bruno ஹாட்ரிக் கோல்களையும் Pogba 4 கோல் உதவிகளையும் பதிவு செய்ய Man Utd 5-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Premier League முதல் போட்டி வாரத்தில் ஹாட்ரிக் கோல் அடித்த 10 ஆவது வீரராக Bruno Fernandes சாதனை படைத்தார்.