CSKஇன் அடுத்த கெப்டன் யார்?

ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 4 வீரர்களால் சென்னை சுப்பன் கிங்ஸ் அணியை வழிநடத்த முடியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களான ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ரொபின் உத்தப்பா, வெய்ன் பிராவோ ஆகியோரால் அணியை வழிநடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

“தலைமைத்துவத்திற்கான திறமை இவர்களிடம் உண்டு. ஆட்டத்தை நன்றாக புரிந்து செயல்படக்கூடியவர்கள். டோனிக்கு பிறகு சென்னை அணியின் அடுத்த கேப்டனாக வர முடியும்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வந்த 35 வயதான சுரேஷ் ரெய்னாவை இந்த முறை யாரும் ஏலம் எடுக்கவில்லை.

இதனால் இந்த சீசனில் அவர் வர்ணனையாளராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது