Breaking : CSKஇன் கேப்டன் பதவியை துறந்தார் டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ். டோனி விலகியுள்ளார்.

இதனால், ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்திற்கு முன் அணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களை தக்க வைத்துக் கொண்டது.
அதில் முதல் வீரராக ஜடேஜாவை தக்கவைத்தது. இதனால் டோனி கேப்டன் பதவியில் நீடிப்பது குறித்து விவாதம் எழுந்தது.
அப்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் டோனி கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவித்தது. நாளைமறுதினம் ஐ.பி.எல். 2022 சீசன் தொடங்குகிறது. இந்த நிலையில், இன்று டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். இதை அணி நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் ஜடேஜா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார். டோனி கேப்டன் பதவியில் இருந்த விலகினாலும் வீரராக அணியில் இடம் பிடித்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous articleமகளிர் உலக்கிண்ண புள்ளிப் பட்டியல் – இந்தியா தகுதி பெறுமா ? 
Next articleIPL தலைமைத்துவ விலகல்- காரணத்தை விளக்கிய CSK CEO காசி விஸ்வநாதன்…!