இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் கடந்த முறை சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி டக்வொர்த் லூயிஸ் கோட்பாட்டின் கீழ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் ஆனது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்ய குஜராத் அணியை அனுமதித்தார், அதன்படி அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்தனர்.
பதில் இன்னிங்சை விளையாடிய சென்னை அணி, இன்னிங்ஸின் மூன்றாவது பந்திற்குப் பிறகு மழை குறுக்கிட்டது. பின்னர் சுமார் 2 மணி நேரம் 20 நிமிடம் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
பின்னர் 15 ஓவரில் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணிக்கு ஆட்டம் தொடங்கியது. இன்னிங்ஸின் கடைசி பந்தில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை சென்னை அணி கடந்தது.
ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் இன்னிங்ஸின் தொடக்க விக்கெட்டுக்கு 6.3 ஓவர்களில் 74 ரன்கள் என்ற அதிரடியை உருவாக்க முடிந்தது. கெய்க்வாட் 26(16) ரன்களிலும், கான்வே 47(25) ரன்களிலும் அதே ஓவரில் ஆட்டமிழந்தனர். இரு விக்கெட்டுகளையும் நூர் அகமது கைப்பற்றினார்.
அஜிங்க்யா ரஹானே 13 பந்துகளில் 27 ரன்களும், தனது கடைசி ஐபிஎல் போட்டியில் விளையாடிய அம்பதி ராயுடு 8 பந்துகளில் 19 ரன்களும் எடுத்து சென்னை அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தனர்.
ராயுடு அவுட்டாகும்போது சென்னை அணியின் வெற்றிக்கு 14 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. எனினும், முதல் பந்திலேயே எம்எஸ் தோனி ஆட்டமிழக்க, போட்டியின் கட்டுப்பாடு மெதுவாக டைட்டன்ஸ் அணிக்கு திரும்பியது.
ஆனால், சிவம் துபே 21 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 6 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 15 ரன்களும் எடுத்து சூப்பர் கிங்ஸ் அணிக்கு சூப்பர் வெற்றியை தேடித் தந்தனர்.
போட்டியின் வெற்றிக்கு கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா மோகித் சர்மா வீசிய இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
பந்துவீச்சில் மொஹித் ஷர்மா 36 க்கு 3 விக்கெட்டுக்களையும், நூர் அஹமட் 17 க்கு 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
முதலில் பேட் செய்த டைட்டன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 39 (20) ரன்களில் ரவீந்திர ஜடேஜாவின் பந்து வீச்சில் மகேந்திர சிங் தோனி ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். விருத்திமான் சாஹா 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார்.
இன்னிங்ஸின் ஆணிவேராக மாறிய 21 வயதான சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் எடுத்தார். 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் அவரது இன்னிங்ஸை வண்ணமயமாக்கின. ஹர்திக் பாண்டியா 21(12) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பந்துவீச்சில் மத்திஷ பத்திரன 44 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாய் சுதர்சன் மற்றும் ரஷித் கான் ஆகியோர் அவரால் ஆட்டமிழந்தனர். தீபக் சாஹர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இடையே ஒரு விக்கெட் பகிரப்பட்டது.
இந்த வெற்றி மூலம் சென்னை தமது 5 வது IPL கோப்பையை தமதக்கி வரலாறு படைத்துள்ளது.
எமது YouTube தளத்திற்கு 👇