சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்டர்பிசுர் ரஹ்மான் மீண்டும் பங்களாதேஷ் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான வீசாக்களை பெற்றுக்கொள்வதற்காக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன் காரணமாக அவர் வெள்ளிக்கிழமை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழக்கலாம் என கூறப்படுகிறது.
ஐபிஎல் முடிந்து ஒரு வாரத்திற்குள் (மே 26) ஜூன் 1-ம் தேதி இருபது20 உலகக் கோப்பை தொடங்க உள்ளது.
தற்போது இந்த ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் முஸ்டர்பிசுர் ரஹ்மான். மூன்று போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் அவரால் விளையாட முடியாவிட்டால், வெளிநாட்டு வீரராக மகிஷ் தீக்ஷனவை மீண்டும் அணிக்கு அழைப்பதில் சென்னை அணி கவனம் செலுத்தும் என வெளிநாட்டு விளையாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தப் போட்டியின் முதல் போட்டியில் மட்டும் சென்னை அணிக்காக விளையாடிய தீக்ஷன, அந்தப் போட்டியில் அவரால் விக்கெட் எதுவும் எடுக்க முடியவில்லை.