CSK யின் முக்கிய வீரர் உபாதை..!

நியூசிலாந்து தொடக்க வீரர் டெவோன் கான்வே, எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் பாதியை விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார்.

கான்வேயின் இடது கட்டை விரலில் உடைந்த எலும்புக்கு இந்த வாரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

இதன்படி, அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவரால் விளையாட முடியாது.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர் குறைந்தது எட்டு வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் போது விக்கெட் கீப்பிங் செய்யும் போது கான்வேக்கு காயம் ஏற்பட்டது.

காயத்திற்குப் பிறகு, அவர் விக்கெட் கீப்பிங் செய்திருக்கவில்லை, பேட்டிங் செய்யவில்லை.

காயம் காரணமாக, அவர் மூன்றாவது டி20 போட்டியிலும், இரு நாடுகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

2023 ஐபிஎல் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான கான்வே இறுதிப் போட்டியின் கடைசி ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருதும் பெற்றார்.