CSK vs MI – பற்றிய விரிவான அலசல் -படியுங்கள் ?

CSK vs MI – Match Review

ரெண்டு பேருமே table’லோட bottom place. ரெண்டு பேருக்கும் நெனச்ச மாதிரி போகவே இல்ல. ஜெயிச்சிடலாம்ன்னு நெனைக்குற எடத்துல, கனவுல கூட நெனச்சு பாக்க முடியாத ஒரு விஷயம் நடந்து matchயே காவு வாங்கிட்டு போய்டுச்சு.

என்ன ஆனாலும், ரெண்டு பேருமே IPLலோட ஆண்டைங்க தான். இப்போ, கீழ விழுந்தாலும், எப்போ மீண்டு எழுந்திருக்கணும்ன்னு தெரியும். இப்பேற்பட்ட ரெண்டு சிங்கங்கள், ஒண்டிக்கு ஒண்டி மோதுனா அது எப்போவுமே Thriller படம் மாதிரி விறுவிறுப்பாவும், பல திருப்புமுனைகளையும் கொண்டு தான் இருக்கும். அப்படி தான் இன்னிக்கும் அமைஞ்சுது.

இன்னிய போட்டியில ஏன் சென்னை ஜெயிச்சாங்க ? முதல் விஷயம் முகேஷ் சவுதரியோட Powerplay spell. CSK teamல ஒரு player, ரொம்பவும் சுமாரான performance குடுத்தாலும், social mediaவுக்கே பேசும்பொருளா இருந்தாலும், அந்த playerருக்கு திரும்ப திரும்ப வாய்ப்பு தராங்கன்னா, நிச்சயமா அந்த playerர கண்டு opponents பயப்படணும். இதை காலம் காலமா, CSKவ நுணுக்கமா follow பண்ணுற ஒவ்வொரு ஆளுக்கும் நல்லாவே தெரியும்.

ஏன்னா, “நெருப்புல விழுந்தது இரும்பு. அத இடிச்சு இடிச்சு, கத்தியாகிடுச்சு. கத்திக்கு தெரிஞ்சதுலாம் ஒண்ணே ஒன்னு தான் !”. அந்த பட்ட தீட்டுன கத்தி தான், இன்னிக்கி CSKவோட பரம்பரை பகையாளியோட மேல்தட்டையே காலி பண்ணிடுச்சு.

MIயும் CSKவோட top orderர தூக்குனாங்க. ஆனா, ரெண்டு teamsக்கும் உண்டான ஒரே விஷயம், experience !. இந்த பக்கம், Young and inexperienced middle order lineup, அதே அந்த பக்கம், இந்த மாதிரி பல பிரச்சனைகளை பாத்து சமாளிச்ச Robbie மற்றும் Rayudu. அவங்களோட partnership தான் இந்த chaseக்கான அடித்தளத்தையே போட்டு கொடுத்துச்சு. இங்க தான் நம்மளோட முதல் வெற்றி.

ரெண்டாவது Pretorious மற்றும் MSD !. ஜடேஜா, pavilionனுக்கு போகும்போதே 4 ஓவர்’ல 48 ரன்கள் தேவை. பும்ராவுக்கு ரெண்டு ஓவர் மிச்சம் வெச்சுட்டு, இதெல்லாம் ரொம்பவும் கஷ்டம், மும்பைக்கு தான் இந்த போட்டின்னு நினைக்கும்போது, திரும்பவும் CSK களத்துல இறக்குனது, அவங்களோட ஆயுதமான experience தான். 17வது ஓவர்’ல பும்ரா வீச,6 ரன்கள் மட்டுமே அடிக்கிறாங்க. 3 ஓவருக்கு 42 ரன்கள் தேவை. ஒரு பக்கம், நல்லா middleல meet பண்ணுற Pretorious. மறுபக்கம், Finishingக்கு பெயர்போன தோனி !

தோனியை பொறுத்த வரைக்கும், கடைசி ஓவர் வரைக்கும் ஆட்டத்தை கொண்டு போகணும்ன்னு ஒரே ஒரு எண்ணம் தான். கடைசி ஓவர்’ல யார் betterரா pressure handle பண்ராங்கன்னு both mentally and physically, மோதி பாத்துரலாம் !. அழகா, Pretoriousக்கு strike கொடுத்துட்டு 1s’அ 2s’ஆ convert பண்ணி ஓடுறாங்க. உனட்கட் கிட்ட ரெண்டு ஓவர் இருக்கு, அதா குறிவெச்சு அடிக்கிறாங்க. 14 ரன் வருது. திரும்ப பும்ராவோட ஓவர். இதை மட்டும் எப்படியாவது 10 ரன் கிட்ட அடிச்சிட்டு கடைசி ஓவர்’ல ஒரு வாய்ப்பு இருக்கும்னு கணக்கு பண்ணி ஆடுறாங்க. Pretorious’உம் அதுக்கு ஏத்தாப்ல விளையாட, 2 boundaryயும் கிடைக்குது. கடைசி ஓவருக்கு போவுது. தேவை 17 ரன்கள் 6 பந்துகள்’ல. முதல் ballல wicket, அடுத்த ballல single, 16 off 4ன்னு வந்து நிக்குது. தோனியோட மனசுல இருந்ததுலாம், கடைசி ஓவர்ல யாரு betterரா pressure handle பண்றோம்ன்னு மோதி பாத்துரலாம்’ங்குற ஒரு முடிவு. அதுக்கான நேரத்துக்காக, இரையை வேட்டையாடுற கழுகுபோல காத்திருந்து காத்திருந்து, அதுக்கான நேரம் வருது. உனட்கட்டை ஏற்கனவே முன்னாடி அடிச்சிருந்தாலும், இப்போ இது சாத்தியமாங்குற கேள்வி !


ஆனா தோனியோ, தன்னம்பிக்கையின் உச்சமா இருந்திருக்காரு. அந்த தன்னம்பிக்கையோட உச்சக்கட்டம் எந்த அளவுக்கு நம்ம இலக்கை அடைய உதவும்ன்னு மறுபடியும் நிரூபிக்குறாரு. முதல் ball straightல sixer. அடுத்தது short ball, பின்னாடி தட்டி விட்டு நாலு ரன். அதுக்கு அடுத்து யார்க்கர் ball, தட்டி விட்டு வழக்கம் போல 1ஐ ரெண்டா மாத்துற அளவுக்கு running. கடைசில 4 ரன்கள் தேவை. உனட்கட் சொதப்ப, 4 அடிச்சு முடிக்குறாரு.

தலயோட masterclassலாம் தாண்டி, சென்னை சூப்பர் கிங்’ஸோட முகமா இருக்குற ஒரு ஆள், காலங்கள் கடந்தும், எல்லாம் முடிஞ்சுதுன்னு நெனைக்குற சமயத்துல இந்த மாதிரி ஒரு சம்பவம் பண்ணும்போது, அந்த அணியோட ஒட்டுமொத்த energyயையும் boost பண்ணுற விதமா அமைஞ்சிருக்கு. இந்த ஒரு finishingகே, இனி வர்ற போட்டிகள்ல, CSKவோட performance’அ தூக்கி விடும்.

இப்போ எல்லாமே ஓரளவுக்கு set ஆகியிருக்கு. Batting பொறுத்த வரைக்கும் கடப்பாரை தான். Bowling பொறுத்த வரைக்கும் spinல ஜடேஜா, தீக்ஷனா set ஆயிட்டாங்க. Paceல முகேஷ் சவுதரி, powerplayல சொல்லி வெச்ச மாதிரி ஒரு விக்கெட்டாவது எடுத்துருவாரு. கூடவே deathல Bravo மற்றும் பிரிட்டோரியஸ்’ன்னு இன்னும் வலுவா தான் இருக்கு. Fieldingல கவனம் செலுத்தினாலே போதும். Tournamentல போராடலாம் !

#MEZ