DK & Dhoni Story ❤️

DK & Dhoni Story ❤️

2004 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே மற்றும் கென்யாவிற்கு இந்தியா A சுற்றுப்பயணத்தின் போது MS தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் அணி வீரர்களாக இருந்தனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் கௌதம் கம்பீர், ஆகாஷ் சோப்ரா மற்றும் ரோஹன் கவாஸ்கர் போன்ற பிற முக்கிய பெயர்களும் அணியில் இடம்பெற்றன. பயிற்சி அமர்வுகளில் தோனி பந்துவீசுவதில் உள்ள விருப்பத்தால், விக்கெட் கீப்பராக இருந்தாலும் அனைவருக்கும் பந்து வீசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஆகாஷ சோப்ரா ஜிம்பாப்வே சுற்றுலாவில் தோனியின் ரூம்மேட்டாக இருந்தார், மேலும் தேசிய அணி ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனைத் தேடுவதால், இந்தியா அழைப்பின் விளிம்பில் இருந்த கார்த்திக்கிடம் பந்து வீச வேண்டாம் என்று அவருக்கு அறிவுறுத்தினார். இருப்பினும், தோனி தன்னை மகிழ்விப்பதாகக் கூறியதோடு, கார்த்திக்கிடம் தொடர்ந்து பந்து வீசினார்.

இரண்டு வாரங்கள் நீடித்த ஜிம்பாப்வே சுற்றுலாவின் பிறகு, இங்கிலாந்தில் இந்தியாவின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு தேசிய அணிக்கு கார்த்திக் மற்றும் ரொஹான் கவாஸ்கர் தேர்வு செய்யப்பட்டனர். அதேநேரம் இந்தியா A அணி கென்யாவுக்குச் சென்றபோது கார்த்திக், ரொஹான் கவாஸ்கர் ஆகியோர் தேசிய அணிக்காக இங்கிலாந்துக்கு பறந்தனர்.

ஜிம்பாப்வேயில் நடந்த ஒரே 50 ஓவர் ஆட்டத்தில் கார்த்திக் மற்றும் தோனி இருவரும் விளையாடினர். ஆனால் கார்த்திக் இல்லாததால், அதன்பின்னரான கென்யா சுற்றுலாவில் இந்தியா A அணிக்கு விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக தோனி செயலாற்றினார்.

கார்த்திக் இங்கிலாந்தில் இந்தியாவுக்காக அறிமுகமானபோது, ​​கென்யாவில் இந்தியா A அணிக்காக அதிக ரன் எடுத்த வீரராக தோனி மாறினார் (முக்கோண தொடரில் பாகிஸ்தான் A அணியும் இருந்தது) இந்த தொடராலேதான் அங்குதான் தோனி முதலில் தேர்வாளர்களது வெளிச்சத்திற்கு வந்தார்.

இந்த ஆண்டின் இறுதியில், தோனி இந்தியாவுக்காக அறிமுகமானார் மற்றும் 2005 டிசம்பரில் தனது டெஸ்ட் அறிமுகம் மேற்கொண்டார்,

பல ஆண்டுகளுக்குப் பிறகு, 2008 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனக்காக ஏலம் எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கார்த்திக் கூறினார், ஏனெனில் அவர் தமிழ்நாட்டிலிருந்து அந்த அணிக்காக விளையாடிய மிகப்பெரிய பெயர். ஆனால், அந்த இடம் தோனிக்கு சென்றது.

இந்திய அணியில் ஒரே இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் வளர்ந்த எம்எஸ் தோனி மற்றும் தினேஷ் கார்த்திக் இடையேயான வாழ்க்கைச் சமன்பாடு இதுதான்.

இப்போது 2022 இல், தோனி எல்லாம் சாதித்து முடித்து ஓய்வு பெற்றுவிட்டார், அதே நேரத்தில் கார்த்திக் இந்திய அணியில் மீண்டும் வர முயற்சிக்கிறார்.

வாழ்க்கை போராட்டங்களால் சூழ்ந்தது ❤️

T.Tharaneetharan