Dream. Visualise. Execute, ரிஸ்வானின் இந்த வீடியொவைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள்..!

Dream. Visualise. Execute, ரிஸ்வானின் இந்த வீடியொவைப் பார்த்தால் மிரண்டு போவீர்கள்..!

இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் உலக்கிண்ணப் போட்டி உலகெங்கிலும் உள்ள அவர்களின் ரசிகர்களுக்கு நினைவில் கொள்ள வேண்டிய ஒரு சிறந்த போட்டியாக அமைந்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக, அவர்கள் T20 உலகக் கோப்பை சூப்பர் 12 கட்டத்தில் தங்கள் அண்டை நாடான இந்தியாவுக்கு எதிராக உலக்கிண்ண வரலாற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.

அவர்களின் வெற்றியின் மிகப்பெரிய பங்காற்றியவர் தொடக்க ஆட்டக்காரரும் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான்.

ஒரு துடுப்பாட்ட வீரரைப் பொறுத்தவரை, சில காட்சிகளைக் காட்சிப்படுத்தவும், போட்டிக்கு முன்னதாக அவர்களின் தன்னம்பிக்கையை பெறவும் உதவுவதில் நிழல் பேட்டிங் (Shadow Batting) முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஞாயிற்றுக்கிழமை துபாயில் பாகிஸ்தானின் 10-விக்கெட் வெற்றியில் அபாரமாக 79 நாட்-அவுட் எடுத்த ரிஸ்வான், விளையாடும் போட்டிக்கு முன்னர் நிறைய கனவுகண்டார், அதாவது பந்து வருவது அடிப்பது, தடுப்பது என்று ஏராளமானவற்றை காண்பித்தார்.

அவை அத்தனையையும் துல்லியமாக போட்டியில் வெளிப்படுத்தினார் என்பதை ICC அற்புதமாக துல்லியமாக வீடியோவாக காட்டுகிறது.

வீடியோவைப் பாருங்கள் மிரண்டு போவீர்கள் “.