DRS வேணாம் மச்சானு சொன்ன ராகுல்.. பெரிய திரையில் வந்த ரீப்ளே.. கடுப்பான அக்சர் பட்டேல்

DRS வேணாம் மச்சானு சொன்ன ராகுல்.. பெரிய திரையில் வந்த ரீப்ளே.. கடுப்பான அக்சர் பட்டேல்

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் டெல்லி, ராஜஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் ஒரு ருசிகர காமெடி சம்பவம் நடைபெற்றது. டி20 போட்டிகளில் எப்போதுமே நடுவரின் ஒரு தவறான முடிவு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடும். இதனை தடுப்பதற்காக தான் ஒவ்வொரு அணிக்கும் இரண்டு டிஆர்எஸ் முடிவை பிசிசிஐ வழங்கி இருக்கிறது.

ஆனால் அதனை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதை கேப்டன் தான் தேர்வு செய்ய வேண்டும். இந்த சூழலில் டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 32வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது.

இதனை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி அபாரமாக விளையாடி வந்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் மூன்று சிக்ஸர், இரண்டு பவுண்டரி என 19 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த சூழலில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 73 ரன்கள் தேவைப்பட்டது.

அப்போது 15 வது ஓவரை கேப்டன் அக்சர் பட்டேல் வீசினார். இதில் நிதிஷ் ரானா முதல் பந்தை சிக்ஸரும் இரண்டாவது பந்தை பவுண்டரியும் அடித்து அசத்தினார். இந்த சூழலில் நிதிஷ் ரானாவுக்கு ஒரு பந்தை அக்ச்சர் பட்டேல் வீசினார். அது நிதிஷ் ரானாவின் காலில் பட்டது. இதற்கு அக்சர் பட்டேல் நடுவரிடம் அவுட் கேட்டார். ஆனால் இதற்கு அவுட் தர நடுவர் மறுத்துவிட்டார்.

இதனை அடுத்து டிஆர்எஸ் முடிவை எடுக்கலாமா என அக்சர் பட்டேல் யோசித்த நிலையில், அங்கிருந்து ஓடி வந்த விக்கெட் கீப்பர் ராகுல் வேண்டாம், இது அவுட் கிடையாது டிஆர்எஸ்ஐ வீணடிக்க வேண்டாம் என்று கூறினார். இதனை அடுத்து அக்சர் பட்டேல் டிஆர்எஸ் முடிவை வேண்டாம் என்று விட்டுவிட்டார்.

அதன் பிறகு அடுத்த பந்தில் நிதிஷ்ரானா பவுண்டரி விரட்டினார். இதை அடுத்து, ஓவர் முடிந்த பிறகு ரீப்ளேவில் இது அவுட்டா இல்லையா என காட்டப்பட்டது. அப்போது ப்ல்ந்து ஸ்டெம்பில் பட்டு இருக்கும் என ரீப்ளேவில் தெரியவந்தது. இதனால் drs முடிவை அக்சர் பட்டேல் எடுத்திருந்தால், அது அவுட் ஆகி இருக்கும். இதனை பெரிய திரையில் பார்த்தவுடன் அக்சர் பட்டேல் கடுப்பாகி ராகுலை பார்த்து திட்டினார். அனைத்து வீரர்களும் பெரிய திரையில் இதை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். ஆனால் இதனை கவனிக்காத ராகுல் எதற்கு எல்லாரும் இப்படி இருக்கிறீர்கள் என்பது போல் ரியாக்ஷன் கொடுத்து தனது வேலையை பார்க்க தொடங்கினார்.

Previous articleபதற்றம் அடைந்த உடனே அந்த விசயத்தை தான் செய்தேன்..ஸ்டார்க்கால் மட்டுமே அது முடியும்- அக்சர்
Next articleIPL ல் ஷானக இணைகிறார்..!