“டக்சன் தி டிஃபென்டர்” க்கு ஒரு அஞ்சலி
டிஃபென்டர் என்ற வார்த்தையும், டக்சன் புஸ்லாஸும் இலங்கை கால்பந்து என்று வரும்போது எப்போதும் கைகோர்த்துச் செல்கின்றன.
அவர் இப்போது இல்லை என்று எண்ணுவது உண்மையில் துரதிர்ஷ்டவசமானது. மாலத்தீவில் கழகமட்ட போட்டிகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் நேற்று அவர் காலமானபோது அவருக்கு 31 வயதுதான்.
யோகேந்திரன் டக்சன் புஸ்லஸ் மன்னாரில் பிறந்தார் மற்றும் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் தான் தனது கால்பந்தாட்ட திறமைகளை கற்றுக்கொண்டார். பல ஆண்டுகளாக அவர் இலங்கை தேசிய கால்பந்து அணியில் திறமையை நிரூபித்தவர் மற்றும் அணியில் இருந்த சிறந்த Defender களில் ஒருவராக இருந்தார்.
அவர் 2018 முதல் தேசிய ஜெர்சியில் 21 போட்டிகளில் விளையாடியுள்ளார் ,அவரது சமீபத்திய போட்டிகள் SAFF சாம்பியன்ஷிப் மற்றும் இலங்கையில் இடம்பெற்ற நான்கு நாடுகளின் அழைப்பிதழ் போட்டியாகும்.
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக டிராவில் முடிந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
அவர் நியூ யங்ஸ் மற்றும் கொழும்பு எஃப்சிக்காக கிளப் கால்பந்து விளையாடினார். 2020 ஆம் ஆண்டில், அவர் மாலத்தீவு கால்பந்து கிளப், TC ஸ்போர்ட்ஸில் கையெழுத்திட்டார், மேலும் இந்த ஆண்டு திவேஹி பிரீமியர் லீக்கிற்கான கிளப் வலென்சியாவின் ஒரு பகுதியாக இருந்தார்.
“Duckson the Defender” என்பது இலங்கையில் மாத்திரமன்றி ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களும் நினைவுகூரக்கூடிய ஒரு பெயர் டக்சன் .
“நாங்கள் எப்பொழுதும் அதிக போட்டிகளை வெல்வோம், பல கோப்பைகளை வெல்வோம், ஒன்றாக ஓய்வு பெறுவதும் பற்றி பேசினோம்! ஆனால் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றீர்கள் “ – இலங்கை கால்பந்து அணித்தலைவர் சுஜன் பெரேரா
“டக்சன் புஸ்லாஸின் மறைவு நம் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இலங்கை கால்பந்தாட்ட அணியின் பிரபல வீரரான டக்சன் பலரது நெருங்கிய நண்பராக இருந்தவர். அவரது பூத உடல் சாந்தியடையும்படி நாங்கள் பிரார்த்திக்கின்றோம்.”
இலங்கை கால்பந்து அவர்களின் சிறந்த பாதுகாவலர்களில் ஒருவரை இழந்தது, ஆனால் மிக முக்கியமாக, ஒரு அன்பான நண்பரை.
அமைதியாக இளைப்பாறுங்கள் டக்சன்??