#ENGvIND-ராகுல், பாண்ட் அதிரடி- 337 ஓட்டங்கள் வெற்றி இலக்கு.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 336 ஓட்டங்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் சதம் அடித்தார்.

புனேயில் நடக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் வென்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

இந்தநிலையில் முதலில் ஆடிய இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி ஆரம்பம் கொடுத்தது. 17 பந்தில் 4 ஓட்டங்கள் மட்டும் எடுத்து திரும்பினார் தவான். வேகமாக ஓட்டங்கள் சேர்த்த ரோகித், 25 ஓட்டங்களுடன் வெளியேறினார் . பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஹ்லி 62வது அரைசதம் அடித்தார். இவர் 66 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

அற்புதமாக ஆடிய ராகுல் ஒருநாள் அரங்கில் ஐந்தாவது சதம் அடித்தார். சிக்சர் மழை பொழிந்த ரிஷாப் பன்ட், ஒருநாள் அரங்கில் 2வது அரைசதம் அடித்தார். இவர் 40 பந்தில் 77 ஓட்டங்கள் பெற்றார். ஹர்திக் பாண்ட்யா 16 பந்தில் 35 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 336 ஓட்டங்கள் பெட்ரா நிலையில் இங்கிலாந்து அணிக்கு 337 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Previous article20 ஆண்டுகளுக்கு பின்னர் சதமடித்த நமபிக்கை நாயகன் நிஸ்ஸங்க.
Next articleலோகேஷ் ராகுல் சதம் …! (மீம்ஸ்)