EPL தொடரில் மூன்று ஆண்டு தொடர் முயற்சியில் மகுடம் சூட்டிய பருத்தீவு கோல்டன் குயின்..!

EPL தொடரில் மூன்று ஆண்டு தொடர் முயற்சியில் மகுடம் சூட்டிய பருத்தீவு கோல்டன் குயின்..!

2021 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட எமது எழுவைதீவு மண்ணினை சார்ந்த 60ற்கு மேற்பட்ட வீரர்களை உள்ளடக்கி இலைமறை காய் இருந்த பலரின் முழுமையான ஒத்துழைப்புடன் நடாத்தப்பட்டது தொடர் படிப்படியாக முன்னேற்றம் கண்டு விளையாட்டின் மகிழ்வை இரட்டிப்பாக்க 2023 நடைபெற்ற மூன்றாவது பருவகாலம் சுற்றில் பொம்மலாட்டம் சிலம்பாட்டம் மற்றும் இசைச் சங்கமம் பாண்ட் குழுமம் என பலதும் இணைந்து பக்குவம் தந்தது.

அந்த வகையில் 2023 மகுடம் சூட்டிய பருத்தீவு கோல்டன் குயின் உரிமையாளர் அன்ரனி யோசப் யோறன்ஸ் யோசப் உரிமையாளரின் வழிநடத்தலுடனும் பயிற்சிப்பாளர் டெனி அவர்களின் பயிற்சியுடனும் அணித்தலைவர் அ.அற்புதராஜ் அவர்களின் அர்ப்பணிப்புடனும் பார்வையாளர்களின் பலத்த ஆதரவுடனும் பருத்தீவு கோல்டன் குயின் அணி 1:0 என்ற அடிப்படையில் ஜெபா கிங் அணியை வெற்றி யீட்டியமை குறிப்பிடத்தக்கது.

எமது மக்களின் உயர் சொத்தாகவும் பழைமையின் அடையாளமான பருத்தீவில் எமது மூதாதையர் வாழ்ந்து பிறந்து கலைகளை வளர்த்து இறந்தும் இன்றும் வாழ்கின்றனர் அதன் நாமம் என்றும் அழியாமலும் பருத்தீவு காணிக்கை மாதாவின் துணைதாங்கி பருத்தீவுக்கோல்டன் குயின் ஆரம்ப உரிமையாளர் அ.அருள்நாதன் அவர்களால் சூட்டப்பட்ட பருத்தீவு கோல்டன் குயின் அணி
2021..மூன்றாம் இடம்
2022 இரண்டாம் இடம்
2023 முதலாம் இடம்
என படிப்படியாக முன்னைற்றம் காண அயராது உழைத்த வீரர்கள் ஆலோசகர்கள் அணுசரணையாளர்கள் அனைவருக்கும் நன்றியையும் மகிழ்ச்சியையும் பகிர்கின்றனர்.

செய்தி -கழகத்தினர்