Euro கிண்ணத்தில் மற்றுமொரு அதிர்ச்சி: உலக சாம்பியன் France வெளியேறியது

Euro கிண்ணத்தில் மற்றுமொரு அதிர்ச்சி: உலக சாம்பியன் France வெளியேறியது

Euro கிண்ணம் 2020 இன் Round of 16 போட்டியில் உலக சாம்பியன் France மற்றும் Euro Knockout போட்டிகளில் வெற்றியையே கண்டிராத Switzerland அணிகள் மோதின.

போட்டியின் ஆரம்பத்திலேயே Switzerland ஒரு கோலினால் முன்னிலை பெற்று அதிர்ச்சியளித்தது. இம் முன்னிலையை முதல் பாதியில் France முறியடிக்கமுடியாது போக முதல் பாதியில் Switzerland 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்ததது.

இரண்டாம் பாதி ஆரம்பத்தில் மீண்டும் France இற்கு அதிர்ச்சி காத்திருந்தது. Switzerland அணிக்கு ஒரு Penalty வாய்ப்பு கிடைத்தது. எனினும் அவ் வாய்ப்பை Switzerland தவறவிட உடனடியாக Benzema France இற்கு ஒரு கோல் அடித்து போட்டியை சமனிலைப் படுத்தினார். மீண்டும் அடுத்த 2 நிமிடங்களுக்குள் Benzema இரண்டாவது கோல் அடிக்க France முன்னிலை பெற்றது. தொடர்ந்து 74 ஆவது நிமிடத்தில் Pogba ஒரு கோல் அடிக்க France 3-1 என முன்னிலை பெற்றது.

இறுதி 10 நிமிடங்களுக்குள் 2 கோல் முன்னிலையுடன் நுழைந்த France இற்கு அடுத்தடுத்து அதிர்ச்சியளித்தது Switzerland. தொடர்ந்து 2 கோல்கள் அடித்து போட்டியை 3-3 என சமநிலை ஆக்கியது Switzerland. ஆட்டத்தின் 90 நிமிட முடிவில் போட்டி சமநிலையாக போட்டி மேலதிக 30 நிமிடங்களுக்கு சென்றது. மேலதிக நேரத்தில் இரு அணிகளும் கோல் போட முடியாது போக போட்டி Penalty முறைக்கு சென்றது.

Penalty இல் தனது 5 வாய்ப்புக்களையும் கோல் ஆக்கியது Switzerland. France இன் 5 ஆவது வாய்ப்பை நட்சத்திர வீரர் Mbappe அடிக்க அதை Switzerland கோல் காப்பாளர் Sommer லாவகமாக தடுக்க Penalty முறையில் 5-4 என Switzerland வெற்றி பெற்றது.

 

கடந்த Euro கிண்ணத்தின் Runners Up உம் நடப்பு உலக சாம்பியனும் ஆன France Round of 16 இல் வெளியேறி அதிர்ச்சியளித்தது. அத்துடன் இவ் வெற்றியே Switzerland Euro கிண்ண Knockout போட்டிகளில் பெறும் முதல் வெற்றியாகும்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இரு போட்டிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.