Euro கிண்ணம்: முதல் அணியாக Knock Out சுற்றுக்கு நுழைந்தது இத்தாலி

Euro கிண்ணம்: முதல் அணியாக Knock Out சுற்றுக்கு நுழைந்தது இத்தாலி

Euro கிண்ணம் 2020 இல் நேற்று இடம்பெற்ற போட்டியில் Switzerland அணியை வீழ்த்தி Italy குழு A இல் இருந்து முதல் அணியாக Knock Out சுற்றுக்கு நுழைந்துள்ளது.

இத்தாலி அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. குழு A இல் நேற்று இடம்பெற்ற மற்றைய போட்டியில் Wales அணி துருக்கி அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் மூலம் Wales 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வி அடைந்து துருக்கி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாள இழந்துள்ளது.

அத்துடன் நேற்று இடம்பெற்ற முதல் போட்டியில் குழு B இல் Russia Finland அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டுள்ளது.