Euro கிண்ணம்: Extra time வரை இத்தாலியை அழைத்து சென்று வெளியேறியது Austria
Euro கிண்ணம் 2020 இன் Round of 16 2 ஆவது போட்டியில் இத்தாலி மற்றும் Austria அணிகள் மோதின. 30 போட்டிகள் தோல்வி அடையாமல் விளையாடி வரும் இத்தாலி இப் போட்டியில் இலகுவில் வெல்லும் என எதிர் பார்க்கப்பட்ட போதும் Austria Italy அணிக்கு சாவாலாக அமைந்தது.
90 நிமிடங்கள் முடிவில் கோல் ஏதும் இல்லாத நிலையில் போட்டி மேலதிக நேரத்துக்கு சென்றது. மேலதிக நேரத்தில் இத்தாலி 2 கோல்கள் அடித்து அசத்தியது. எனினும் Austria அணியும் ஒரு கோல் போட்டது. இத்தாலி அணிக்கு எதிராக சுமார் 1000 நிமிடங்களில் பெறப்பட்ட முதல் கோல் இதுவாகும்.
இத்தாலி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.