Euro 2020: ஸ்பெயின் ஐ வீழ்த்தி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இத்தாலி
Euro கிண்ணம் 2020 இன் முதலாவது அரையிறுதிப் போட்டி நேற்று Wembley மைதானத்தில் இடம்பெற்றது.
இத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இத்தாலி மற்றும் ஸ்பெயின் அணிகள் முதலாவது அரையிறுதியில் மோதின.
போட்டி இரு அணிகளும் ஒவ்வொரு கோல் அடிக்க 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையாகி பெனால்டி முறைக்கு சென்றது. பெனால்டி முறையில் இத்தாலி 4-2 என வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இளம் ஸ்பெயின் அணி அரை இறுதியுடன் வெளியேறியது.
இன்றைய அரை இறுதிப் போட்டியில் England மற்றும் Denmark அணிகள் மோதுகின்றன.