Europa League கிண்ணம் பெனால்டி முறையில் மான்செஸ்டர் யுனைடெட் தோல்வி

Europa League கிண்ணம் பெனால்டி முறையில் மான்செஸ்டர் யுனைடெட் தோல்வி

 

2020/21 இற்கான Europa League கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்தில் இன்று Villarreal மற்றும் Manchester United அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் ஒரு கோல் அடித்து முன்னிலை வகித்தது Villarreal. எனினும் இரண்டாம் பாதியில் Manchester United வழமை போல் ஆட்டத்தை சமப்படுத்தி அச்சுறுத்தியது. எனினும் 90 நிமிட முடிவில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமநிலையிலேயே  இருந்ததது.

வெற்றியாளரை நிர்ணயிக்க வழங்கப்பட்ட மேலதிக 30 நிமிடங்களிலும் இரு அணிகளாலும் மேலதிக கோல்கள் பெறப்படாத நிலையில் ஆட்டத்தின் முடிவு Penalty Kick முறைக்கு சென்றது.

Penalty Kick அனைத்து வீரர்களும் சிறப்பாக செயற்பட 11 ஆவது வீரரின் முறை வரை சென்றது. இறுதியில் 12-11 என்ற கோல் கணக்கில் Villarreal வெற்றி பெற்று UEFA Europa League 2021 சாம்பியன் ஆனது.

இதன் மூலம் மீண்டுமொருமுறை Spain கழக அணிகளின் ஐரோப்பிய ஆதிக்கத்தை நிரூபித்தது.