FAB 4 எனப்படும் உலகின் முன்னணி 4 டெஸ்ட் ஆட்டக்காரர்களின் உள்நாட்டு, வெளிநாட்டு டெஸ்ட் சராசரி விபரம்..!
கிரிக்கெட் ரசிகர்களால் FAB 4 என அழைக்கப்படும் உலகின் முன்னணி நான்கு டெஸ்ட் ஆட்டக்காரர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் எவ்வாறு டெஸ்ட் போட்டிகளில் சாதித்திருக்கிறார்கள் எனும் விபரத்தை தரப்போகிறோம்.
ஒரு சில வீரர்கள் உள்நாட்டிலேயே அதாவது சொந்த மண்ணிலேயே சாதிப்பார்கள் ,ஆனால் வெளிநாடுகளுக்கான டெஸ்ட் சுற்றுலாவை மேற்கொள்கின்ற போது துடுப்பாட்டத்தில் சொதப்புவார்கள்.
ஆனால் இந்த FAB 4 எனப்படும் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் சராசரியாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் டெஸ்ட் போட்டிகளில் சாதித்திருக்கிறார்கள்.
இந்த பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மிக அதிக சராசரியை பேணுகின்ற வீர்ராக காணப்படுகிறார் .
கோலி உள்ளூரில் மூன்றாவது இடத்திலும், வெளிநாட்டு மண்ணில் 4 வது இடத்திலும் சராசரியை கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சொந்த மண்ணில் டெஸ்ட் சராசரி.
ஸ்மித் -67.72
வில்லியம்சன் – 65.31
கோலி- 64.31
ஜோ ரூட் -51.94
வெளிநாட்டு மண்ணில் சராசரி.
ஸ்மித் -57.10
ரூட் -47.96
வில்லியம்சன் -45.28
கோலி -43.10