FIFA உலகக் கிண்ணம்: புள்ளிகள் சமமாக வருமிடத்து அடுத்தது என்ன ⁉️

FIFA உலகக் கிண்ணம்: புள்ளிகள் சமமாக வருமிடத்து ⁉️

Cricketக்கு Net Run Rate #NRR போல Footballக்கு #Tiebreaker
By: Ziyad Aia

Cricket உலகக் கிண்ண போட்டிகளில் குழு (Group) நிலை போட்டிகளில் அணிகளின் புள்ளிகள் சமமாக வரும்போது Net Run Rate பார்க்கப்படுகிறது.

அதே போல் உதைப்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டிகளில் புள்ளிகள் சமமாக வரும்போது Tiebreaker முறை மூலம் எவ்வாறு அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகின்றன என நோக்கலாம்.

கட்டாரில் நடைபெறும் 2022 FIFA உலகக்கிண்ண தொடரில் வழமைபோல 32 அணிகள் 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒரு குழுவில் 4 அணிகள் வீதம் உள்ளன.

ஒவ்வொரு குழுவிலிருந்தும் இரு அணிகள் அடுத்த சுற்றுக்கு (Group of 16) தெரிவு செய்யப்படும்.

உதைப்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை பொறுத்தவரை
குழு நிலை போட்டிகளில் (Group Stage) Goal இல்லாமல் or சமநிலையில் முடிந்தால் அணிக்கு ஒவ்வொரு புள்ளி வழங்கப்படும்.
மேலதிக நேரமோ , Penaltyகள் மூலமோ இறுதி முடிவு எட்டப்படுவதில்லை.
(கிரிக்கெட்டில் இரு அணிகளும் ஓட்டங்கள் சமமாக பெறப்படுமிடத்து Group நிலை போட்டிகளிலேயே இறுதி முடிவு வரும்வரை Super Over மேல் Super Over வீசப்பட்டு பெறுபேறு பெறப்படும்.)

மாறாக FIFA Knock Out Stage இலேயே மேலதிக நேரம் வழங்கப்படும். அதிலும் முடிவு கிடைக்காதவிடத்து Penaltyகள் மூலம் முடிவு தீர்மானிக்கப்படும்.)

FIFA Group நிலையில் ஒரு அணி வெற்றி பெறுமிடத்து அவ்வணிக்கு 3 புள்ளிகளும்,
போட்டி சமநிலையில் முடியுமிடத்து அணிக்கு தலா ஒரு புள்ளி வீதமும் வழங்கப்படும்.

FIFA உலகக்கிண்ணம்:
32 அணிகள் கொண்ட முதல் சுற்றில் 4 அணிகள் கொண்ட ஒவ்வொரு Groupஇலும் ஒரு அணிக்கு 3 போட்டிகள் கிடைக்கும்.
அந்த நால்வர் கொண்ட Groupஇல் இரு அணிகள் அடுத்த Knock out round of 16க்கு முன்னேறும்.

அந்த இரு அணிகளும் பின்வரும் அடிப்படையில் தெரிவு செய்யப்படும்.

🛑 Step 01:

✅ 01. அதிக புள்ளிகள் பெறும் அணி.

புள்ளிகள் சமமாக வருமிடத்து

✅ 02. அதிக Goal வித்தியாசத்தை கொண்ட அணி (கிறிக்கெட்டில் Net Run Rate போன்றது)

அதாவது ஒரு அணி 3க்கு 2 என்ற Goal கணக்கில் வெற்றி பெற்றால்

இங்கு
அடித்த Goal – Goal For (GF) = 3
விட்ட Goal – Goal Against (GA) = 2
Goal வித்தியாசம் Goal Difference (GD)
= 3 – 2 = 1

அவ்வணியின் Goal வித்தியாசம் (3-2) +1. எதிரணிக்கு அது -1 ஆக வரும்.

இதிலும் அணிகள் சமமாக வந்தால்

 

✅ 03. அதிக Goal களை போட்ட அணி (Goal For) இல் யார் கூடுதலான புள்ளிகளை பெறுகிறாறோ அந்த அணி.

கொய்யால இதிலும் சமமாக வந்தால் Stage 2 க்கு செல்ல வேண்டும்.

🛑 Stage 2:
சம புள்ளிகளை பெற்ற அணிகள் 2ஆகவோ, 3ஆகவோ, ஏன் 4ஆகவோ இருக்கலாம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு கீழே வாசிக்க.

✅ 04. எந்த அணிகள் மேலுள்ள 3 Scenario களிலும் சமமாக வருகிறதோ அந்த அணிகள் தமக்குள் மோதும்போது அதிக புள்ளிகளை (Number of Points) பெற்றவர் தெரிவாவார்.

அதிலும் புள்ளிகள் சமமாக வருமிடத்து

✅ 05. கருத்தில் கொள்ளப்படும் அணிகளில் அதிக Goal Difference (GD) உள்ள அணி தெரிவாகும்.

அதிலும் சமமாக வருமிடத்து

✅ 06. கருத்தில் கொள்ளப்படும் அணிகளில் தமக்கிடையில் அதிக Goalகள் போட்ட அணி Goal For (GF) உள்ள அணி தெரிவாகும்.

இதிலும் சமமாக வருமிடத்து

✅ 07. Yellow & Red Card பெற்ற அடிப்படையில் புள்ளி வழங்கப்பட்டு தீர்மானிக்கப்படும்.

i. Yellow Card = -1
ii. Indirect Red Card (2 Yellow Cardஇனால் கிடைப்பது) = -3
iii. Direct Red Card = -4
IV. Yellow Card & Direct Red Card = -5

இப்பவே கண்ண கட்டுதே இவ்வளவு தேவையா? என்றால் இறுதியாக நடந்த உலகக் கிண்ணம் தேவை என்றே சொல்லி இருக்கிறது:

இந்த 7வது நிபந்தனை வரை சட்டப்புத்தகத்தை புரட்டிப் பார்க்க வைத்து இறுதியாக 2018இல் நடந்த FIFA உகக்கிண்ண போட்டியில்
Senagalஐ தாண்டி Japan அணி Group of 16 க்கு முன்னேறியது. Japan Vs Senagal 2:2
(அந்த பெறுபேற்றையே படத்தில் காண்கிறீர்கள். Rulesஐ பிரயோகித்து பார்க்க.)

ஷப்பா. இப்போ இந்த Yellow Card, Red Card புள்ளிகளும் சமமாக வந்தால் Wild Cardஆ? ஆம் Wild Card தான் 8வது.

✅ 08. Drawing of Lots by FIFA

💞 இதனை உங்கள் வாசிப்புக்கு விடுகிறேன். விளக்கத்தை Comments இல் இடவும். ( இந்த 8வது நிகழ்வும் வரலாற்றில் நிகழ்ந்துள்ளது. 😱)
நன்றி: FIFA

💓 Take Home Message:
Gaolகளின் எண்ணிக்கை அடுத்த சுற்றை தீர்மானிப்பதால் குழுநிலைப் (Group Stages) போட்டிகளில் அணிகள் அதிக கோள்களைப் பெற ஆர்வம் காட்டும்.

ஆனால் Knockout (Group of 16 & above) நிலை வரும்போது எப்படியாவது வெற்றி பெற்றால் போதும் என்ற நிலை காணப்படுவதால் முதல் கோளை போட்ட அணி அதன் பின்னர் அப்போட்டியில் Test விளையாடி வெறுப்பேற்றுவதையும் எதிரணி T20 விளையாடுவதையும் அவதானிக்க முடியும்.

தமிழாக்கம் By: Ziyad Aia

எமது YouTube தளத்துக்கு பிரவேசியுங்கள் 👇