FIFA வினால் தடை செய்யப்பட்டது இலங்கை கால்பந்து சம்மேளனம்…!

FIFA வினால் 2023 ஜனவரி 21 முதல் மறு அறிவித்தல் வரை இலங்கை கால்பந்து சம்மேளனம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 14ஆம் திகதி நடைபெற்ற இலங்கை கால்பந்துத் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஒப்புக்கொள்ளப்பட்ட பாதை வரைபடத்திலிருந்து இலங்கை அதிகாரிகள் விலகியதால் மூன்றாம் தரப்பினரின் தலையீடு காரணமாக இந்த இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இறுதியாக இடம்பெற்ற தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.ஶ்ரீ ரங்கா இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது YouTube தளத்திற்கு செல்வதற்கு 👇