FIFA World Cup வரலாற்றில் அதிக இறுதிப்போட்டிகளில் (Finals) விளையாடிய நாடுகள்!

🏆 FIFA World Cup வரலாற்றில் அதிக இறுதிப்போட்டிகளில் (Finals) விளையாடிய நாடுகள்!

நடப்பு 2026 FIFA World Cup குரூப் சுற்று போட்டிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை அதிகமுறை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்த அணிகளின் பட்டியல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கால்பந்து உலகின் அசுர பலம் வாய்ந்த ஜெர்மனி அணி இதுவரை அதிகபட்சமாக 8 முறை உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடி சாதனை படைத்துள்ளது.

அதிக உலகக் கோப்பைகளை வென்ற பிரேசில் அணி 7 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இரண்டாம் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் அர்ஜென்டினா அணிகள் தலா 6 முறையும், தற்போதைய பலம் வாய்ந்த பிரான்ஸ் அணி 4 முறையும்இறுதிப்போட்டியில் விளையாடியுள்ளன.

நெதர்லாந்து அணி 3 முறை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தாலும், ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உருகுவே, செக்கியா (செக் குடியரசு), ஹங்கேரி ஆகிய அணிகள் தலா 2 முறையும்; ஸ்பெயின், இங்கிலாந்து, குரோஷியா, ஸ்வீடன் ஆகிய அணிகள் தலா 1 முறையும் இறுதி ஆட்டத்தில் களம் கண்டுள்ளன.

நடப்பு 2026 தொடரிலும் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகிய அணிகள் நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளதால், இந்த முறை இறுதிப்போட்டிக்குச் சென்று தங்களின் எண்ணிக்கையை உயர்த்தப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது!

#FIFAWorldCup #FootballStats #GermanyFootball #WorldCupFinals

Previous article15 வயதில், 15 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி அரைசதம்.. அலங்கார பந்தலில் சிஎஸ்கே பந்துவீச்சு
Next articleஉலகக்கோப்பை (World Cup) தொடரில் அமெரிக்க அணி புதிய வரலாறு: