Gnanam panits Champion Trophy 20 -20 சுற்றுத்தொடரின் 12ம்; 13ம்; 14ம் போட்டிகள்

வடக்கில் கோலாகலமாக இடம்பெற்று வரும் Gnanam panits Champion Trophy 20 -20 சுற்றுத்தொடரின் 12ஆம்; 13ஆம்; 14ஆம் போட்டிகள் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமை சென் பற்றிக்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் போட்டியாக Kokuvil Stars அணி North Conqerors   அணிகள் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Kokuvil Stars அணியினர்  முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். அந்தவகையில்  முதலில் துடுப்பெடுத்தாடிய Kokuvil Stars அணி 18.5 பந்துப்பரிமாற்றங்களை எதிர் கொண்டு 6 விக்கட்  இழப்பிற்கு 108 ஓட்டங்களை பெற்றது. அவ் அணி சார்பாக சயந்தன் 32 பந்துகளை எதிர்கொண்டு 30 ஓட்டங்களையும், சாகித்தியன் 13 பந்துகளை எதிர்கொண்டு 19 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் North Conqerors  அணி சார்பாக கபில்ராஜ் 4 பந்துப்பரிமாற்றங்களில் 10 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கட்களையும் துவாரகசீலன் 3.5 பந்துப்பரிமாற்றங்களில் 15 ஓட்டங்களிற்கு 2 விக்கட்களையும் கைப்பற்றி இருந்தனர்.
109 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய North Conqerors அணியினர் 16.3 பந்துப்பரிமாற்றங்களில்  4 விக்கட்  இழப்பிற்கு 112 ஓட்டங்களை பெற்று 6 விக்கட்களால் வெற்றி பெற்றனர்.North Conqerors சார்பாக சன்சயன் 49 பந்துகளை எதிர்கொண்டு 43 ஓட்டங்களையும், சத்தியன் 22 பந்துகளை எதிர்கொண்டு 21 ஓட்டங்களையும்   பெற்றுக்கொடுத்தனர். Kokuvil Stars  அணி சார்பாக மோகனகுமார் 2.3 பந்துப்பரிமாற்றங்களில் 12 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கட்இனையும், பிரதீசன் 4 பந்துப்பரிமாற்றங்களில் 14 ஓட்டங்களிற்கு 1 விக்கட் இனையும்  கைப்பற்றி இருந்தனர்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக North conqerors அணியின் சன்சயன் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது போட்டியாக Jaffna Royals அணி மற்றும் Chulipuram Vikings அணிகள் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Chulipuram Vikings அணியினர்  துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். அந்தவகையில் முதலில்  துடுப்பெடுத்தாடிய Jaffna Royals அணியினர் 20 பந்துப்பரிமாற்றங்களை எதிர் கொண்டு 5 விக்கட்  இழப்பிற்கு 135 ஓட்டங்களை பெற்றது. அவ் அணி சார்பாக பிரியலக்சன் 41 பந்துகளை எதிர்கொண்டு 44 ஓட்டங்களையும், அருண்குமார் 45 பந்துகளை எதிர்கொண்டு 42 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் Chulipuram Vikingsஅணி சார்பாக நிரோசன் 3 பந்துப்பரிமாற்றங்களில் 28 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கட்களையும் செந்தூரன் 3.4 பந்துப்பரிமாற்றங்களில் 12 ஓட்டங்களிற்கு 1 விக்கட்களையும் கைப்பற்றி இருந்தனர்.

136 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Chulipuram Vikings 20 பந்துப்பரிமாற்றங்களில் 9 விக்கட்களை இழந்து 120 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். அவ் அணி சார்பாக பிரதீஸ் 31 பந்துகளை எதிர்கொண்டு 32 ஓட்டங்களையும், ஹீகுகன் 32 பந்துகளை எதிர்கொண்டு 29 ஓட்டங்களையும்   பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் Jaffna Royals அணி சார்பாக சுஜன் 4 பந்துப்பரிமாற்றங்களில் 12 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கட்களையும், பிரசன்னா 4 பந்துப்பரிமாற்றங்களில் 18 ஓட்டங்களிற்கு 2 விக்கட் இனையும்  கைப்பற்றி இருந்தனர்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக Jaffna Royals அணியின் பிரியலக்சன் தெரிவு செய்யப்பட்டார்.

மூன்றாவதுபோட்டியாக Nallur Broncos அணி மற்றும் Aggressive Boys அணிகள் மோதிக்கொண்டன.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Nallur Broncos அணியினர்  முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். அந்த வகையில்முதலில் துடுப்பெடுத்தாடிய Nallur Broncos அணியினர் 20 பந்துப்பரிமாற்றங்களை எதிர் கொண்டு 7 விக்கட்களை இழந்து 130 ஓட்டங்களை பெற்றது. அவ் அணி சார்பாக. பிரதீப் 21 பந்துகளை எதிர்கொண்டு 33 ஓட்டங்களையும், பிரியலக்சன் 30 பந்துகளை எதிர்கொண்டு 27 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் Aggressive Boys அணி சார்பாக ஞானந்தசர்மா 4 பந்துப்பரிமாற்றங்களில் 17 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கட்களையும் பிரதீபன் 4 பந்துப்பரிமாற்றங்களில் 27 ஓட்டங்களிற்கு 2 விக்கட் இனையும்  கைப்பற்றி இருந்தனர். 131 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Aggressive Boys அணியினர் 20 பந்துப்பரிமாற்றங்களில் 7 விக்கட்களை  இழந்து 99 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர் . Aggressive Boys அணி சார்பாக ஆதித்தன் 27 பந்துகளை எதிர்கொண்டு 24 ஓட்டங்களையும், வினொத் 12  பந்துகளை எதிர்கொண்டு 13 ஓட்டங்களையும்   பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் Nallur Broncos அணி சார்பாக டர்வின் 4 பந்துப்பரிமாற்றங்களில் 23 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கட்களையும், குகசதுர்ஸ் 4  பந்துப்பரிமாற்றங்களில் 24 ஓட்டங்களிற்கு 2 விக்கட் இனையும்  கைப்பற்றி இருந்தனர்.

Vilaiy
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக Nallur Broncos அணியின் டர்வின் தெரிவு செய்யப்பட்டார்.