Gnanam panits Champion Trophy 20 -20 சுற்றுத்தொடரின் 9ம்; 10ம்; 11 ம் போட்டிகள்

வடக்கில் கோலாகலமாக இடம்பெற்று வரும் Gnanam panits Champion Trophy 20 -20 சுற்றுத்தொடரின் 9ஆம்; 10ஆம்; 11ஆம் போட்டிகள் 06.02.2021 சனிக்கிழமை சென் பற்றிக்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

முதல் போட்டியாக அரியாலை கில்லாடிகள் 100  அணி மற்றும் Chulipuram Vikings   அணிகள் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Chulipuram Vikings அணியினர்  முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். அந்தவகையில்  முதலில் துடுப்பெடுத்தாடிய Chulipuram Vikings அணியினர் 19 பந்துப்பரிமாற்றங்களை எதிர் கொண்டு 6 விக்கட்  இழப்பிற்கு 121 ஓட்டங்களை பெற்றது. அவ் அணி சார்பாக மதுஷன் 39 பந்துகளை எதிர்கொண்டு 55 ஓட்டங்களையும், நிரோசன் 38 பந்துகளை எதிர்கொண்டு 37 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் அரியாலை கில்லாடிகள் 100  அணி சார்பாக மதுஷன் 3 பந்துப்பரிமாற்றங்களில் 18 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 விக்கட்களையும் சுஜாந்தன் 4 பந்துப்பரிமாற்றங்களில் 19 ஓட்டங்களிற்கு 1 விக்கட்களையும் கைப்பற்றி இருந்தனர்.

122 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் 100  அணியினர் 16.5 பந்துப்பரிமாற்றங்களில்  3 விக்கட்  இழப்பிற்கு 123 ஓட்டங்களை பெற்று 7 விக்கட்களால் வெற்றி பெற்றனர்.அரியாலை கில்லாடிகள் 100  சார்பாக அகீசன் 56 பந்துகளை எதிர்கொண்டு 69 ஓட்டங்களையும், வியாஸ்காந்த் 18 பந்துகளை எதிர்கொண்டு 22 ஓட்டங்களையும்   பெற்றுக்கொடுத்தனர். Chulipuram Vikings  அணி சார்பாக அலன்ராஜ் 4 பந்துப்பரிமாற்றங்களில் 15 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 1 விக்கட்இனையும், தினோஜன் 3 பந்துப்பரிமாற்றங்களில் 18 ஓட்டங்களிற்கு 1 விக்கட் இனையும்  கைப்பற்றி இருந்தனர்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக அரியாலை கில்லாடிகள் 100 அணியின் அகீசன் தெரிவு செய்யப்பட்டார்.

இரண்டாவது போட்டியாக Jaffna Panters அணி மற்றும் Kokuvil Stars அணிகள் மோதிக்கொண்டன. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Jaffna Pantersஅணியினர்  துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர். அந்தவகையில் முதலில்  துடுப்பெடுத்தாடிய Jaffna Panters அணியினர் 20 பந்துப்பரிமாற்றங்களை எதிர் கொண்டு 8 விக்கட்  இழப்பிற்கு 126 ஓட்டங்களை பெற்றது. அவ் அணி சார்பாக கோமைந்தன் 33 பந்துகளை எதிர்கொண்டு 35 ஓட்டங்களையும், நிதர்சன் 17 பந்துகளை எதிர்கொண்டு 17 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் Kokuvil Stars அணி சார்பாக ரம்யராகுலன் 4 பந்துப்பரிமாற்றங்களில் 22 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கட்களையும் சாகித்தியன் 4 பந்துப்பரிமாற்றங்களில் 19 ஓட்டங்களிற்கு 2 விக்கட்களையும் கைப்பற்றி இருந்தனர்.

127 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Kokuvil Stars 20 பந்துப்பரிமாற்றங்களில்   சகல விக்கட்களையும் இழந்து 122ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். அவ் அணி சார்பாக மோகனகுமார் 22 பந்துகளை எதிர்கொண்டு 25 ஓட்டங்களையும், பிரதீசன் 27பந்துகளை எதிர்கொண்டு 23 ஓட்டங்களையும்   பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் Jaffna Panters அணி சார்பாக கனிஸ்ரன் 4 பந்துப்பரிமாற்றங்களில் 12 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கட்களையும், ஜெரிக்துஷன் 3.5 பந்துப்பரிமாற்றங்களில் 16 ஓட்டங்களிற்கு 2 விக்கட் இனையும்  கைப்பற்றி இருந்தனர்.

இப்போட்டியின் ஆட்ட நாயகனாக Jaffna Panters அணியின் கனிஸ்ரன் தெரிவு செய்யப்பட்டார்.

மூன்றாவதுபோட்டியாக Jaffna Royals அணி மற்றும் Chundikuli Eagles அணிகள் மோதிக்கொண்டன.நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Chundikuli Eagles அணியினர்  முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர்.

அந்த வகையில்முதலில் துடுப்பெடுத்தாடிய Chundikuli Eagles அணியினர் 19. 5 பந்துப்பரிமாற்றங்களை எதிர் கொண்டு சகல விக்கட்களையும் இழந்து105 ஓட்டங்களை பெற்றது. அவ் அணி சார்பாக அன்புஜன் 33 பந்துகளை எதிர்கொண்டு 36 ஓட்டங்களையும், பிருந்தாபன் 19 பந்துகளை எதிர்கொண்டு 28 ஓட்டங்களையும் தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் Jaffna Royals அணி சார்பாக பிரசன்னா 4 பந்துப்பரிமாற்றங்களில் 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கட்களையும் பிரியலக்சன்  4 பந்துப்பரிமாற்றங்களில் 23 ஓட்டங்களிற்கு 3 விக்கட் இனையும்  கைப்பற்றி இருந்தனர். 106 எனும் வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய Jaffna Royals அணியினர் 17.5  பந்துப்பரிமாற்றங்களில் 7 விக்கட்களை  இழந்து 106 ஓட்டங்களை பெற்று 3 விக்கட்களால் வெற்றி பெற்றனர் . Jaffna Royals அணி சார்பாக கௌதமன் 25  பந்துகளை எதிர்கொண்டு 31ஓட்டங்களையும், சந்தோஷ் 27  பந்துகளை எதிர்கொண்டு 23 ஓட்டங்களையும்   பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் Chundikuli Eagles அணி சார்பாக யதுஷன் 4 பந்துப்பரிமாற்றங்களில் 20 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கட்களையும், கஜாணன் 4  பந்துப்பரிமாற்றங்களில் 15 ஓட்டங்களிற்கு 2 விக்கட் இனையும்  கைப்பற்றி இருந்தனர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக Jaffna Royals  அணியின் பிரசன்னா தெரிவு செய்யப்பட்டார்.

அத்துடன் அன்றய நாள் ஆட்டத்தினை கண்டுகளிப்பதற்காக இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் சனத் ஜெயசூரியா சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்தார் என்பது குறிப்பித்தக்கது.