*God was on My Side”: டெஸ்ட் போட்டியை வென்ற பின் வீரரின் கூற்று 

*God was on My Side”: டெஸ்ட் போட்டியை வென்ற பின் வீரரின் கூற்று 

1999ஆம் ஆண்டு சென்னை டெஸ்ட் போட்டியை வென்றதைப் பற்றி சக்லைன் முஸ்டாக் கூறிய வார்த்தைகள் இவை.

நடந்து முடிந்த இந்தியா ஆஸ்திரலியா டெஸ்ட் எந்த அளவுக்கு விறுவிறுப்பாக இருந்ததோ அதே அளவுக்கு இருந்த போட்டி அது.

இந்தியா 271 ரன்களை எடுக்க வேண்டும், 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் விழுந்துவிடுகிறது. களத்தில் சச்சினும், மோங்கியாவும் இருக்கிறார்கள். மேட்ச் முடிந்துவிட்டது. இந்தியா இன்னும் 50 ரன்கள் அதிகமாகச் சேர்க்காது என நினைத்தபோது, சச்சின் தனது வாழ்நாளின் சிறந்த ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார்.

மோங்கியாவை ஒருபுறம் நிற்கவைத்து விட்டு, வாசிம் அக்ரம், வாக்கார் யுனிஸ், சக்லைன் முஸ்டாக் என 3 பேரையும் ரவுண்ட் கட்டி அடிக்க ஆரம்பித்தார்.

இந்த 3 பேரால் சச்சினைத் தடுத்து நிறுத்தவே முடியல, ரன் வந்துக்கிட்டே இருக்கு! ஒருகட்டத்தில் சக்லைன் முஸ்டாக், கேப்டன் வாசிம் அக்ரம்ட்ட போய், “என்னாலா சச்சினை அவுட் ஆக்கமுடியும்னு தோணல, எந்தவித பால் போட்டாலும், எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கார்!” னு நொந்துபோய் சொன்னார். “தூஸ்ரா போட்டாக் கூட பவுண்டரி அடிக்கிறார், இவர் விக்கெட்ட எடுக்கிறது ரொம்பவே கஷ்டம்!” னு புலம்ப ஆரம்பிச்சார், பாகிஸ்தானுக்கு அப்ப சக்லைனை விட்டா ஆள் இல்ல, அக்ரம் மனசை தளரவிட்ராத, தொடர்ந்து போடு ஏதாவது மேஜிக் நடக்கும்னு சொல்லிப் போடச் சொன்னார்.

சச்சின் நல்லா ஆடிட்டு இருந்தப்ப, 82 ரன்கள் எடுத்திருக்கும்போது, முதுகுவலி வந்து ரொம்பவே அவதிப்பட்டார், பிஸியோ உள்ள வரவும் போகவுமா இருக்க, அந்த வலியோடே ஆடி சதமடிச்சுட்டார்.

218 ரன்கள் கிட்ட இந்தியா எடுத்திருச்சு! களத்தில், சச்சின், மோங்கியா இரண்டு பேருமே நிக்க, வெற்றி உறுதினு எல்லாரும் நினைக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்ப வில்லன் மாதிரி புதுப்பந்து வர, முதல் பலிகடாவா மோங்கியா அவுட் ஆயிட்டுப் போனார். வாசிம் அக்ரம் பால்ல அன்னிக்கு அவர் கொஞ்ச நேரம் நின்னு இருந்தா, இந்தியாவின் பேரில் வெற்றி எழுதப்பட்டிருக்கும்.

வெற்றிக்கு 53 ரன்கள் தேவை, களத்தில் 4 விக்கெட் இருக்கு, சச்சின் திரும்பவும் ஜோஷியை நிக்கவச்சுட்டு, அடிக்க ஆரம்பிச்சார். ஃபீல்டர்கள் எல்லாத்தையும் வெளிய தூக்கிப் போட்டாக் கூட பவுண்டரியைக் கட்டுப்படுத்த முடியல. ஒவ்வொரு ஷாட் அடிச்சிட்டும், முதுகைப் பிடிச்சிட்டு வலியோட நின்னுட்டு இருந்தார், சச்சின். வெற்றிக்குத் தேவை வெறும் 17 ரன்கள்னு வந்துடுச்சு, இந்தியாவை ஜெயிக்க வச்சுடுவார்னு பாகிஸ்தான் வீரர்களே நம்பிட்டு இருக்கும்போது அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.

சக்லைன் பால்ல தூக்கி அடிக்க, பால் எட்ஜ் வாங்கி, வாசிம் அக்ரம் கைல போய் விழுந்தது. ரொம்பவே நொறுங்கிட்டாரு.
17 ரன்கள் எடுக்கனும், 3 விக்கெட்டுகள் இருக்குதுனு நினைக்க இந்தியா பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து அவுட் ஆகிட்டு செல்ல, இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் தோக்குது.

டிரெஸிங் ரூமுக்குள்ள போனவர், அழ ஆரம்பிச்சுட்டார். அவர் அழுகையை யாராலும் கட்டுபடுத்த முடியல, மேட்ச் முடிஞ்சு ‘மேன் ஆப் தி மேட்ச்’ கூட அசார்தான் வாங்குனார், சச்சினுக்கு பதிலா. அவரால் இந்தத் தோல்வியை தாங்கவே முடியல கடைசி வரை.

வழக்கமா மேட்ச் தோத்தா கலைஞ்சுபோற கூட்டத்துக்கு மத்தியில, மொத்த சென்னை ரசிகர்களும் எந்திரிச்சு நின்னு பாகிஸ்தான் வீரர்களுக்கு கைதட்டிப் பாராட்டு தெரிவிச்சாங்க.

இந்த மேட்ச் முடிஞ்சு பல வருஷம் கழிச்சு, சக்லைன் முஸ்டாக் சொன்னார், “சச்சினை அவுட் ஆக்கி மேட்ச் ஜெயிச்ச அன்னிக்கு God was on Myside!” னு சொல்லி சந்தோஷப்பட்டார்.

எத்தனையோ வெற்றிகளை பெற்றுத் தந்த சச்சினால் இந்த வெற்றி கிட்டவரை வந்து வாங்கித் தரமுடியலனு ரொம்பவே உடைஞ்சு அழுத தருணம் இது.

சச்சின் ஆடிய ஒன் ஆஃப் தி பெஸ்ட் இன்னிங்க்ஸ் On this day வில் இன்று!!!!!!

#அய்யப்பன்