முருகேசா! நம்ம கை கால்களுக்கு வடிவத்தையும் உறுதியையும் வழங்குவது எலும்புகள். ஆனா அவற்றை இயக்க உதவுவது Muscles எனப்படும் தசைகள்.
Hamstring Muscles என்பது நம்ம பின்புற இடுப்பு பகுதியில் இருந்து முழங்காலுக்கு கீழ் வரை இணைந்து (பிரதானமாக 3 தசைகள்) அவற்றின் இயக்கத்துக்கு உதவும். அதாவது காலை மடித்தல், நிமிர்த்துதல் வளைத்தலுக்கு (Rotate) உதவுது.
⁉️ ஏன் இந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அடிக்கடி Hamstring Muscleலதான் பிரச்சினை வருது?
Hamstring Muscles என்பவை தனித்துவமானவை. இவை 2 மூட்டுக்களை ஒன்றாக இணைக்குது. அதாவது இடுப்பு மூட்டுக்கு மேல் ஆரம்பித்து முழங்கால் மூட்டுக்கு கீழ் இணைந்து அந்த இரு மூட்டுகளின் அசைவுக்கும் உதவுது.
இந்த Hamstring Injury என்பது கால் தசைகளுக்கு அதிக அழுத்தம் (Overlord) வழங்கும்போது ஏற்படுது.
அதாவது சடுயான வேகமான இயக்கம் அல்லது மெதுவான நீண்ட நேர இயக்கம் காரணமாக ஏற்படுது.
இது கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல. பொதுவாக ஓடுதல், பாய்தல், பாரம் தூக்குதல் போன்றவை சம்மந்தப்பட்ட விளையாட்டுகள் / வேலைகளில் ஈடுபடுவோருக்கு ஏற்படும்.
இந்த தசைகள் (Muscles) என்புகளோட இணையும்போது Tendon (தசை நாண்களாக?) அக மாறி இணையும். அந்த musculo-tendinous junction கொஞ்சம் weak ஆன இடம். அதுல பொதுவாக காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
⁉️ Hamstring Injury வந்தால் 2 நாள் Rest எடுத்துட்டு விளையாட வேண்டியதுதானே. எதுக்கு வாரங்கள், மாதங்கள் ஓய்வு தேவைப்படுது?
முருகேசா! Hamstring Injuryல 3 வகை இருக்கு.
???? Grade 01: இது மென்மையான காயம். அதாவது Strain என்பாங்க. இது பாரதூரம் இல்லாதது. 1 or 2 வாரங்கள் ஓய்வு எடுத்தாலே தசை நார்கள் தானாக புதுப்பிக்கப்பட்டு சரியாகிடும்.
???? ஓய்வு எடுக்காம தொடர்ந்து விளையாடினா காயம் Grade 2 / 3 ஆக மாறி ஆபத்தாகலாம்.
???? Grade 2:
இது Partial Tear. அதாவது பகுதி அளவான கிழிவு. (படத்தைப் பாருப்பா)
இது தானாக குணமாக சில மாதங்கள் செல்லும்.
விளையாட்டு வீரர்களுக்கு இதனை வேகமாக குணமாக்க சத்திர சிகிச்சை செய்து தையல் போடப்படும்.
???? Grade 3:
Complete Rupture of Muscle. முழுமையான கிழிவு. இது தீவிரமான நிலை. குணமாக்க சத்திர சிகிச்சை அவசியம்.
⁉️ Hamstring Injuryயோட அறிகுறிகள் என்ன? அதை எப்படி கண்டுபிடிக்கிறது?
????♂️ பொதுவாக Grade 1 Hamstring Injury வந்தால் காலின் பின்புறம் (தொடைப் பகுதியில்) சடுதியான நோவு, தொடும்போது வலி காணப்படும். ஆனால் வலியுடன் நடக்கக் கூடியதாக இருக்கும்.
????♂️ Grade 2 ஆக இருந்தால் அதிக வலி, மற்றும் தொடுகையில் நோவுடன் வீக்கமும் காணப்படும். நிற்பதும் நடப்பதும் வலி மிகுந்ததாக இருக்கும்.
????♂️ Grade 3 ஆக இருந்தால் தாங்கமுடியாத நோவுடன் வீக்கம், இரத்தம் கண்டித்தது போல் (Bruise) வெளிக்காயம் காணப்படுவதோடு நிற்கவும் அவதியுறும் நிலை காணப்படும்.
❤️ இவற்றை உறுதிப்படுத்த:
✅ 01. X-Ray (மிகக் குறைந்த பயன்)
✅ 02. Ultrasound Scan (ஓரளவு கணிக்க முடியும்)
✅ 03. MRI Scan (Gold Standard Test)
MRI சோதனை மூலம் Hamstring Injuryஇன் Gradeஐ துல்லியமாக கணிக்க முடியும்.
⁉️ இந்த Hamstring Injury வந்தால் என்ன பண்ணனும்?
R.I.C.E எடுக்கனும்.
எது சோறா மாப்ள?
????♂️எப்ப பார்த்தாலும் சோறுட நினப்புதான்.
R.I.C.E னா
❤️ R for Rest: முடிந்த அளவு காலை ஓய்வில் வைத்தல்
❤️ I for Ice: ஒவ்வொரு 2 or 3 மணித்தியாலத்துக்கு ஒருமுறை Ice pack ஐ 20 நிமிடங்களுக்கு ஒத்தடம் பிடித்தல்.
(Iceஐ நேரடியாக தோலில் வைப்பது தோலை பாதிக்கும் ஆதலால் பொலித்தீன் பையிலே வைத்து ஒத்தடம் செய்ய வேண்டும்.)
❤️ C for Compression:
Bandageஐ சுற்றி அழுத்தம் வழங்குவதன் மூலம் வீக்கத்தைக் குறைப்பதோடு பாதிக்கப்பட்ட இடம் அசைவுகளின் போது மேலும் சேதமடைவதை தவிர்க்கும்.
(Bandage சுற்றும் போது அதிகமாக இறுக்கமாக சுற்றக்கூடாது. இது இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.)
❤️ E for Elevation: காலை உயர்த்தி வைத்தல். இதற்கு இரு தலையணைகளை பாவிக்கலாம்.
இவ்வாறு செய்வதால் வீக்கம் விரைவாக குறைந்து நோவிலிருந்து விடுபட உதவும்.
இந்த முதலுதவி களுக்கு மேலதிகமாக Paracetamol போன்ற வலி நிவாரணிகளை பாவிக்கலாம்.
வைத்திய ஆலோசனை மூலம் மேலதிக சிகிச்சைகளை பெறலாம்.
⁉️ அது சரி மாப்ள இந்த Hamstring Injury வராம இருக்க என்ன பண்ணலாம்?
✅ 01. உடல் தசைகளை உடற்பயிற்சி மூலம் உறுதிப்படுத்தல்.
பெரிய போட்டிகளுக்கு முன் சிறிய பயிற்சிகளை உடலுக்கு வழங்காமல் இருக்கிறதால அதிகமானவர்களுக்கு இது ஏற்படுது. (Not warming up properly before exercising.)
✅ 02. தசைகள் தாங்கும் அளவை விட அதிகளவு வேலை (Strain) வழங்குவதை தவிர்த்தல்.
✅ 03. சரியான நுட்பத்தை பயன்படுத்தாமை. (Poor technique)
அதாவது கால்களை பயன்படுத்தும் விதம் ஓடும்போது தவறுதலாக கால் இடறுதல், தடுக்கி விழுதல் etc போன்றவற்றாலும் இது ஏற்படுது. எனவே அவற்றில் கவனமாக இருத்தல்.
✅ 04. சிறிய காயம் ஏற்படும்போது சரியான ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து விளையாட்டு அல்லது உடற்பயிற்சி செய்வதை தவிர்த்தல்.
✅ 05. சிலருக்கு பிறவியிலேயே கால் தசைகள் சரியான விதத்தில் அமைந்திராமை.
By: Dr Ziyad Aia
⁉️ அது சரி மாப்ள நம்ம ஆளுங்க ஏன் அடிக்கடி Hamstring Injury ஆகுறானுக?
#ZiyadAia
#HamstringInjur
#hamstringinjury
#hamstringstrain
#hamstrings