ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- அதிரடி மாற்றம்..!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி தொடர்பில் அதிரடி தீர்மானம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லோர்ட்ஸ் மைதானத்தில் ஜூன் மாதம் 18 ம் திகதி இடம்பெறவிருந்த போட்டி , இங்கிலாந்தின் சவுத்தாம்டன் மைதானதில் இடம்பெறவுள்ளதாக அறியவருகின்றது.

லோர்ட்ஸ் மைதானத்தி விடவும் சவுத்தாம்டன் மைதானத்தில் இருக்கும் வசதி வாய்ப்புக்கள் குறிப்பாக ஐந்து நட்சத்திர வசதி (Five-star facility), இரு அணிகளுக்கும் ஒரு உயிர் குமிழியை (Bio-bubble) உருவாக்குவதை எளிதாக்கும் என்று ICC மற்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை அத்தோடு இந்திய கிரிக்கெட் சபை ஆகியன கருதுவதாக தெரியவருகின்றது.

PTI செய்தி ஸ்தாபனத்துக்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போது இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.