ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி -ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியானது (இன்றைய காலநிலை பற்றிய முழுமையான விபரம்)

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது, நேற்று ஆரம்பமாகும் என செல்லப்பட்டிருந்தாலும் மைதானத்தில் பெய்த கடுமையான மழை காரணமாக போட்டி முழுவதுமாக நேற்று கைவிடப்பட்டது.

இன்று ஆரம்பமாகும் இந்த போட்டி தங்குதடையின்றி நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக காலநிலை அவதான நிலையத்தின் தகவல்கள் கூறுகின்றன .

இங்கிலாந்தின் சவுத்தம்டன் மைதானத்தில் இதுவரைக்கும் மழை இல்லாத நிலையில், மைதான விரிப்புக்களால் மைதானம் முழுமையாக மூடப்பட்டிருக்கிறது.

2.30 PM ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது, நாள் முழுவதும் மழை பொழிவதற்கான ஏதுநிலைகள் குறைவு எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ரசிகர்கள் அதிகமானவர்கள் இந்த போட்டி தொடர்பில் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கிறார்கள்.

23ஆம் திகதி மேலதிகமான நாள் ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்த நாளிலும் போட்டி இடம்பெறும் என்று நம்பப்படுகின்றது.

காலை மற்றும் மதியம் நிலவும் வானிலை ???

மாலைநேர வானிலை அறிக்கை ??

Previous articleஏணியாய் இருந்து ஏற்றிவிட்டவர்களை எட்டித்தள்ளிய இந்திய கிரிக்கெட் நிர்வாகம்..!
Next articleஆரம்பித்தது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் -போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி, முதல் துடுப்பாட்டம் யார் தெரியுமா ?