ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியை தவறவிடப்போகும் இந்தியா…!
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதன் காரணத்தால் ஜூன் மாதம் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் அருமையான வாய்ப்பை தவறிவிடும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக இந்த தொடரில் எந்த அணியும் ஒரு போட்டிக்கு மேல் தோல்வியை தழுவக்கூடாது, அப்படி ஒரு போட்டிக்கு மேல் எந்த அணி தோல்வியை தழுவினாலும், அந்த அணியால் ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இப்போது இந்த 3 வது போட்டியின் வெற்றி வாய்ப்பு இரு அணிகளுக்கும் 50 -50 என்ற நிலையில் காணப்படுகின்றது.
ஆகவே இந்திய அணிக்கு இந்த போட்டியில் தோல்வியை தழுவினால் ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.
அதே நேரம் தொடர் 2-2 என்று அல்லது 2-1 என்று நிறைவுக்கு வந்தால் நியூசிலாந்து அணியுடன் இறுதி போட்டியில் மோதும் வாய்ப்பை அவுஸ்திரேலியா பெற்றுக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஹமதாபாத் டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ஓட்டங்களிலும், இந்தியா 145 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் ஒரேயொரு சுழல் பந்து வீச்சாளரோடு களமிறங்கிய இங்கிலாந்து இந்தியாவை திக்குமுக்காட செய்துள்ளது.
பந்து வீச்சில் ஜாக் லீச் 4 விக்கெட்களையும் பகுதிநேர பந்து வீச்சாளர் அணித்தலைவர் ஜோ ரூட் 8 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
200 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டாலும் போட்டியில் வெற்றிபெறும் வாய்ப்பு காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.