ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் – எந்த அணி தகுதி பெறும் தெரியுமா?
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இதன் காரணத்தால் ஜூன் மாதம் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெறவுள்ள ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் அருமையான வாய்ப்பை தவறிவிடும் நிலை உருவாகிவிடுமோ எனும் சந்தேகத்தை உண்டுபண்ணியுள்ளது.
குறிப்பாக இந்த தொடரில் எந்த அணியும் ஒரு போட்டிக்கு மேல் தோல்வியை தழுவக்கூடாது, அப்படி ஒரு போட்டிக்கு மேல் எந்த அணி தோல்வியை தழுவினாலும், அந்த அணியால் ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியைப் பெற்றுள்ள நிலையில் இப்போது இந்த 3 வது போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் இறுதிப்போட்டிக்கான சந்தர்ப்பம் பிரகாசமாகலாம்.
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று அடுத்த போட்டியை Draw செய்தாலே இந்தியா இறுதி போட்டிக்கு தேர்வாகிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் தொடர் 2-2 என்று அல்லது 2-1 என்று இங்கிலாந்துக்கு சாதகமாக தொடர் நிறைவுக்கு வந்தால் நியூசிலாந்து அணியுடன் இறுதி போட்டியில் மோதும் வாய்ப்பை அவுஸ்திரேலியா பெற்றுக்கொள்ளும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அஹமதாபாத் டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 112 ஓட்டங்களிலும், இந்தியா 145 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா இதுவரை பகலிரவு டெஸ்ட்டில் 2 போட்டிகளிலேயே விளையாடியுள்ளது, இரண்டு போட்டிகளும் 2 1/2 நாளில் நிறைவுக்கு வந்துள்ள நிலையில் இந்த போட்டி 2 நாட்களில் நிறைவை எட்டும் என்று நம்பலாம்.
இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 81 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்த நிலையில் இந்தியாவின் வெற்றிக்கு 49 ஓட்டங்கள் தேவையாகவுள்ளது. அஷ்வின் 4 விக்கெட்களையும், அக்சர் பட்டேல் 5 விக்கெட்களையும் சுந்தர் 1 விக்கெட்டினையும்
இந்தியா இறு. தியாக அடிலெய்ட் மைதானத்தில் விளையாடிய பகலிரவு டெஸ்ட்டின் 2 வது இன்னிங்சில் 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை குறிப்பிடத்தக்கது.