ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்- இந்தியா முதலிடம்.

ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்- இந்தியா முதலிடம்.

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதன்முலம் தொடர் 2-1 என்ற நிலைக்கு வந்துள்ளது.

இதன்முலமாக இந்திய அணி ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. 2 வது இடத்தில நியூசிலாந்து அணியும் 3 வது இடத்தில் அவுஸ்திரேலிய அணியும் காணப்படுகின்றன.

இன்றைய தோல்வி மூலமாக இங்கிலாந்து அணி ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

4 வதும் இறுதியான டெஸ்ட் போட்டியில் இந்தியா தோற்காமல் Draw செய்தாலே ICC டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.