இந்திய கிரிக்கெட் சபையின் தலைவர் சவுரவ் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரை மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் பிசிசிஐ ஆகியவற்றில் பதவி வகிப்பவர்களுக்கான விதிமுறைகளுக்கு இடையே தேவையான முரண் காலத்தை நீக்குவதற்கான பிசிசிஐயின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை ஏற்றுக்கொண்டது.
இந்த வளர்ச்சியால், ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலி செல்வதற்கான வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஐசிசியில் கங்குலி தலைமை பொறுப்பேற்றால், ஜெய் ஷா பிசிசிஐ தலைவர் பதவியை ஏற்பார், அருண் துமால் பிசிசிஐ செயலாளராக வருவார்.
சமீபத்திய தீர்ப்பின்படி, நிர்வாகிகள் தொடர்ச்சியாக இரண்டு முறை சேவை செய்த பின்னரே கூலிங்-ஆஃப் கட்டத்திற்குச் செல்ல வேண்டும். மாநில கிரிக்கெட் சங்கங்களும் இப்போது புதிய விதிமுறைக்கு உட்பட்்டுள்ளன.
தேர்தலில் வெற்றி பெற்றால் ஐசிசி தலைவர் பதவியை வகிக்கும் ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை கங்குலி பெறுவார். அவருக்கு முன் என் சீனிவாசனும், ஷஷாங்க் மனோகரும் ஐசிசி தலைவர் பதவியை வகித்தனர். ஐசிசி தலைவர் பதவியில் ஜக்மோகன் டால்மியாவும், சரத் பவாரும் பதவி வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.