ICC போட்டி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஒரே அணி…!
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புதிய இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான தரவரிசை இன்று வெளியிடப்பட்டது.
இந்த T20 போட்டி தரவரிசையில் இங்கிலாந்து அணி முதலிடத்திலும், இந்திய அணி 2 வது இடத்திலும் காணப்படுகின்றன.
இந்த நிலையில் டெஸ்ட், ஒருநாள், T20 போட்டிகள் அனைத்துக்குமான தரநிலையில் முதல் 3 இடங்களுக்குள் இருக்கும் ஒரே அணி இந்திய அணி என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் போட்டிகளுக்கான தரநிலையில் இந்தியா முதலிடத்திலும், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கான தரநிலையில் இந்தியா 2 வது இடத்திலும் காணப்படுகின்றது.