சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) ஆடவர் கிரிக்கெட் கமிட்டிக்கு இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி ஆடவர் கிரிக்கெட் கமிட்டிக்கான பல நியமனங்களுக்கு ஐ.சி.சி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து ஜெயவர்த்தன மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம், இலங்கையின் மஹேல ஜயவர்தன கடந்த வீரர்களின் பிரதிநிதியாக மீண்டும் குழுவிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கமிட்டியின் உறுப்பினர்கள் பின்வருமாறு:
மஹேல ஜயவர்தன – முன்னாள் வீரர்களின் பிரதிநிதி (மறு நியமனம்)
கேரி ஸ்டெட் – தேசிய அணி பயிற்சியாளர் பிரதிநிதி
ஜெய் ஷா – உறுப்பினர் குழு பிரதிநிதி
ஜோயல் வில்சன் – ஐசிசி எலைட் பேனல் நடுவர்
ஜேமி காக்ஸ் – MCC பிரதிநிதி