ICC யின் சிறந்த வீரர் விருதை வென்ற கமிந்து..!

இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிது மெண்டிஸ் மார்ச் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதை வென்றுள்ளார்.

இவரைத் தவிர அயர்லாந்தின் மார்க் அடேர் மற்றும் நியூசிலாந்தின் மேட் ஹென்றி ஆகியோர் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

மார்ச் மாதம் தொடங்கிய பங்களாதேஷ் சுற்றுப்பயணத்தின் கீழ் நடைபெற்ற டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் கமிந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் 68 ஓட்டங்களைப் பெற்ற கமிந்து, டெஸ்ட் தொடரில் இரண்டு சதங்களையும் ஒரு அரை சதத்தையும் விளாசினார்.

முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த அவர், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 92 ரன்கள் எடுத்தார்.

 

 

Previous articleமேற்கிந்தியத் தீவுகளின் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமைப் பயிற்சியாளராக ரமேஷ் சுபசிங்க நியமனம்…!
Next articleLPL போட்டி அட்டவணை அறிவிப்பு..!